INS சென்னை போர் கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை..!
நீண்ட தூரம் சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் எவுகணையின் மேம்பட்ட பதிப்பை இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை INS சென்னை ஸ்டெல்த் நாசகார போர்கப்பலில் இருந்து நேற்று சோதனை செய்யப்பட்டது. ஏவுகணை நீண்ட தூர பாதையை கடந்து இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், INS சென்னை ஸ்டெல்த் நாசகார போர்கப்பலில் இருந்து சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் மேம்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இது ஆத்மநிர்பர் பாரதத்திற்கு மற்றொரு சாதனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் நவம்பர் 2020 ஆம் ஆண்டு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் தரைவழி தாக்குதல் பதிப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பரில் சூப்பர்சோனிக் போர் விமானமான சுகோய் 30 MKI மூலம் ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் வான் பதிப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்தியா-ரஷ்ய கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், நீர்மூழ்கி கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவக்கூடிய சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருகிறது. பிரம்மோஸ் ஏவுகணை 2.8 மேக் வேகத்தில் அல்லது ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்ககூடியது.