இந்தியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்: நேபாளம்
தற்போது இந்தியா ஆக்கிரமித்துள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை திரும்ப பெற தனது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா சனிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று வரவு செலவு பட்ஜெட் சமர்பிப்புக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய டியூபா, நாட்டுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாப்பதற்கு தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக தெரிவித்தார். முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை திரும்ப பெற டியூபா அரசாங்கம் தவறி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய டியூபா, கலாபானி பகுதியில் நீண்ட காலமாக நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் எல்லை பிரச்சனைகள் உள்ளன. இந்த விவகாரம் உணர்வுப்பூர்வமானது என்பதால் கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்தை சேர்ந்த பகுதிகள் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், அரசாங்கம் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளில் பிரச்சனையை தீர்க்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் ஒலி அரசாங்கம், கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள் வரைபடத்தை வெளியிட்டார். இந்த நேபாளத்தின் ஒருதலைப்பட்சமான பிராந்திய விரிவாக்கத்தை இந்தியா நிராகரித்தது. மேலும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் பிரச்சனையை தீர்க்க நேபாளத்தை இந்தியா அழைத்தது.
Also Read: கனடாவின் எதிரி அமெரிக்கா தான்.. கனடா உளவுத்துறை அறிக்கை தாக்கல்..?
இந்தியா உடனான உறவுகள் பல பரிமாணங்கள் மற்றும் ஒத்துழைப்பின் பகுதிகள் வேறுபட்டவை என கூறிய டியூபா, நாங்கள் எங்கள் வெளிநாட்டு உறவுகளை நடத்தும் போது அணிசேராக் கொள்கையை பின்பற்றுகிறோம். தேச நலன், பரஸ்பர நன்மைகள் மற்றும் மரியாதை ஆகியவற்றை காப்பாற்றும் அதேவேளையில், அண்டை நாடுகளுடனும் அனைத்து நட்பு நாடுகளுடனும் அதன் உறவுகளை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஒலிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read: ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்த கிரீஸ்.. பதிலுக்கு 2 கிரீஸ் கப்பலை கைப்பற்றிய ஈரான்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு பூர்ணிமாவையொட்டி லும்பினிக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். பின்னர் டியூபாயை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியா, நேபாளம் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். டெல்லியில் உள்ள சர்வதேச பௌத்த கூட்டமைப்பு நிலத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான மையம் அமைப்பதற்கான அடித்தள விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
Also Read: பாகிஸ்தானில் பொருளாதாரம், தண்ணீரை தொடர்ந்து தற்போது கோதுமை நெருக்கடி..?