சென்னை அருகே ஐம்பொன் சிலைகள் விற்பனை.. மடக்கி பிடித்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு..
சென்னை அருகே மீனாட்சி அம்மன் மற்றும் ரிஷப தேவர் சிலையை விற்பனை செய்ய முயன்ற கும்பலை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடன் இருந்து சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேல்மருவத்தூர் அருகே உள்ள சீத்தாமூரில் மீனாட்சி அம்மன் சிலை விற்கப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சிலை விற்கப்படும் இடத்திற்கு மாறுவேடத்தில் போலிசார் சென்றனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் மீனாட்சி அம்மன் சிலையை விற்க முயன்றதை பார்த்த போலிசார் கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதற்கு முன்பே கடத்தல்காரர்களின் வழியை கண்டுபிடித்து இடைத்தரகர்களை போலிசார் கைது செய்தனர்.
Also Read: OTT, கிரிப்டோ கரன்சி மற்றும் மொபைல் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்: RSS தலைவர் மோகன் பகவத்
பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ரிஷப தேவர் சிலை கைப்பற்றப்பட்டது. ரமேஷ் மற்றும் கார்த்திக் உட்ன் தொடர்புடைய மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஏழு பேரிடமும் சிலை கடத்தல் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறியப்படி, சிலையை வாங்க விருப்பம் உள்ளவர்களிடம் விற்பனை செய்யும் கும்பல் 10 ரூபாய் கேட்பார்கள். வாங்குபவர் 10 ரூபாயை கடத்தல் காரர்களிடம் கொடுத்துவிடுவார். பின்பு அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொன்னால் சிலை விற்பனை தொடங்கும் என இடைத்தரகர்கள் கூறியுள்ளனர். இரண்டு சிலைகளையும் 1 கோடி ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளனர்.
Also Read: போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானின் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்திய BYJU’S நிறுவனம்..