மேற்கு வங்கத்தில் பட்டாசு விற்பனை செய்யவும் வெடிக்கவும் அம்மாநில அரசு தடை..?

மேற்கு வங்கத்தில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தனிமைபடுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் தனிமை படுத்தப்பட்டுள்ளதால் அவர்களின் உடல்நிலை மற்றும் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் மாநிலத்தில் பச்சை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை பட்டாசுகளை அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வருவதால் அதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்று இரவு 11.55 மணி முதல் அதிகாலை 12.30 வரை 35 நிமிடங்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தடை 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதன் மூலம் கொரோனா தொற்றால் தனிமையில் இருக்கும் நோயாளிகளின் சுவாசத்தில் பிரச்சனை ஏற்படும் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆந்திராவில் துர்கை அம்மன் கோவில் இடிப்பு.. ஜெகன்மோகன் ரெட்டிக்கு பொதுமக்கள், எதிர்கட்சிகள் கண்டனம்..

தற்போது மேற்கு வங்கத்தில் தினந்தோறும் 600 முதல் 700 வரையிலான புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகின்றன. கடந்த வருடமும் கொரோனா தொற்றை காரணம் காட்டி பல மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்தன. இதனால் பட்டாசு விற்பனையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதேபோல் இந்த வருடமும் தடை விதித்தால் பட்டாசு உற்பத்தி நிலையங்களை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Also Read: மேற்குவங்கத்தில் பரபரப்பு.. பாஜகவின் இளைஞர் பிரிவு தலைவர் சுட்டுக்கொலை..

Leave a Reply

Your email address will not be published.