இந்து மதத்தை இழிவு படுத்திய ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும் – எல்.முருகன்
சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் இந்து மதத்தை இழிவு படுத்திய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
பெரம்பலூரில் பேட்டியளித்த முருகன் தமிழக பாஜக சார்பில் “விவசாயிகளின் நண்பன் மோடி” என்ற பரப்புரையை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.. மேலும் விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்த சட்டங்களின் நன்மைகளை எடுத்துக் கூற போகிறோம் என்றும், இம்மாதம் 16ஆம் தேதி துவங்கிய பரப்புரை 25ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவின் போலி முகத்தை மக்களிடம் அம்பலபடுத்துவோம். எதிர்கட்சிகளால் பாஜகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திமுக இரட்டை வேடம் போடுகிறது, மேலும் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் அரசுக்கு எதிராக திட்டமிட்டு தூண்டி விடப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில் நக்சல்கள், தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் உள்ளனர். சென்னையில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்து மதத்தை இழிவு படுத்தியதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்…
மேலும் சமூகவளைதளங்களில் எங்களது பக்கங்களை பின்தொடர…
Facebook : https://www.facebook.com/Topskynews/
Twitter : https://twitter.com/TopSkyNews1?s=09
Instagram : https://www.instagram.com/invites/contact/?i=198i15xjj6rh5&utm_content=knuhol2