பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள இலங்கை தமிழ் எம்.பிக்கள்..

இலங்கையின் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். நீண்ட கால தமிழர் பிரச்சனைக்கு உறுதி செய்ய வேண்டும் எனவும், 13வது திருத்த சட்டத்தை அமல்படுத்த இந்தியா தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி JR.ஜெயவர்த்தனா மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரால் கையொப்பமிட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்திற்கு அதிக செல்வாக்கு வழங்கப்பட வேண்டும் என 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

மூத்த தமிழ் அரசியல்வாதியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, கொழும்பில் உள்ள இந்திய துதரை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தனர். அதில் 13வது திருத்தத்தை அமல்படுத்துவது, அதிகார பகிர்வு உள்ளிட்ட நிறைவேற்றப்படாத உறுதிமொழிகள் கடிதத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தாத்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.வினேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியது உள்ளிட்ட பல்வேறு இந்திய அரசியல் தலைமைகளின் தலையீடுகளை கடிதத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தி, அவர்கள் வாழும் பகுதிகளில் கண்ணியம், சுயமரியாதை, அமைதி மற்றும் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Also Read: சீனாவிற்கு செல்லும் எரிவாயு கப்பல்களை ஐரோப்பாவிற்கு திருப்பும் பிரான்ஸ்..

ஆளும் ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் சிங்கள பெரும்பான்மையினர் தீவின் மாகாண சபை முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என வாதிட்டு வரும் நிலையில், 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தலை முனகூட்டியே நடத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் சமூகத்தின் உரிமைகளை இந்தியா மீண்டும் உறுதிபடுத்தி உள்ளது.

Also Read: சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் இருந்து விலகும் தாய்லாந்து..?

கடந்த 40 ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஒரு நீடித்த மற்றும் நியாயமான தீர்வை கண்டறிய இந்தியா வெளிபடுத்திய உறுதிபாட்டிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உணவு இறக்குமதிக்காக மத்திய அரசு இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ள ஒரு வாரத்திற்கு பிறகு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதுதவிர பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக செவ்வாய் அன்று 500 மில்லியன் டாலர் கடனை இந்தியா அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published.