இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்..

இலங்கையின் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பேரை இலங்கை போலிசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை இலங்கையின் CID மற்றும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தானை சேர்ந்த மூவரையும் இலங்கை போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பாகிஸ்தான் தூதரகத்தின் நடவடிக்கையால் அந்த மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் வழக்கு முடியும் வரை அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன் மற்றும் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் சவுதி அரேபியாவிற்கு செல்ல இருந்ததாக கூறினர். பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவிற்கு நேரடி விமானங்கள் தற்போது கொரோனா பரவலால் இயங்கவில்லை. இதனால் இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்வதற்காக இலங்கை வந்ததாக கூறியுள்ளனர்.

மூவரும் இந்திய தூதரகம் அருகே ஹோட்டலில் தங்கி உள்ளனர். பின்னர் வாகனத்தில் மூவரும் பயணித்து இந்திய தூதரகத்தை தனது மொபைலில் போட்டோ எடுத்துள்ளனர். இதனை கவனித்த இலங்கை போலிசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?

இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என கண்டறிய இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு இலங்கையின் புலனாய்வு அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இந்தியாவுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டியதாக பல குற்றசாட்டுகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: நாட்டை நடத்துவதற்கு அரசிடம் போதுமான நிதி இல்லை.. மாநாட்டில் குமுறிய இம்ரான்கான்..

Leave a Reply

Your email address will not be published.