இலங்கையில் புர்கா அணிய தடை.. 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பள்ளிகளுக்கும் தடை..

இலங்கையில் கடந்த 2019 ஆண்டு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 300-கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது.

குண்டு வெடிப்புக்கு பின் அவ்வபோது இஸ்லாமியர்கள் மீது நெருக்கடி கொடுத்து வந்தது இலங்கை அரசு. அதன் தொடர்ச்சியாக இலங்கையில் முகத்தை மறைக்கும் முழு புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனுமதி பெறாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பள்ளிகளுக்கும் தடை விதிக்கப்படும் என பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா கூறினார்.

மேலும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, கொரோனா தொற்றின் போது உடலை புதைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய முறைபடியே அடக்கம் செய்யப்படும் என கூறியதால் சர்ச்சை உருவானது.

மேலும் அமைச்சர் கூறும் போது ஆரம்ப காலங்களில் இஸ்லாமியர்கள் புர்கா அணியவில்லை என்றும், புர்கா தீவிரவாதத்தின் அடையாளம் எனவும் நிச்சயமாக புர்காவிற்கு தடை விதிக்கப்படும் எனவும் கூறினார். ஏற்கனவே சில ஐரோப்பிய நாடுகள் புர்காவை தடைவிதித்துள்ள நிலையில் அந்த வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *