சீனாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் கடன் கேட்கும் இலங்கை..?

இலங்கை சீனாவிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் கடன் கேட்டுள்ள நிலையில், அதனை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என சீன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்த ஆண்டு 1 பில்லியன் டாலர் சர்வதேச இறையாண்மை பத்திரம் உட்பட சுமார் 4 பில்லியன் டாலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் தற்போது இலங்கையின் கையிருப்பு பிப்ரவரி இறுதியில் 2.31 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த காலத்தில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையம் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றிற்கான சீனா இலங்கைக்கு 5 பில்லியன் டாலர்களுக்கு மேல் கடனாக வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயை சந்தித்த போது கடனை திருப்பி செலுத்துவதை மறுசீரமைக்க உதவுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவும் வகையில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படும் என கடந்த வாரம் ராஜபக்சே கூறினார்.

மேலும் இலங்கை இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதால் கடந்த வாரம் 7,500 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியுள்ளது. இலங்கையின் முக்கிய வருமானம் சுற்றுலாத்துறை மூலமாகவே வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பாதிக்கப்பட்டதால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

Also read: ரஷ்யா உக்ரைன் போர்: உலக கோதுமை சந்தையை பிடிக்க இந்தியா முயற்சி.. எகிப்துடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை..

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை உள்ளதால், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு சீனா இலங்கைக்கு அதிக அளவு கடன் வழங்கியுள்ளது. ஆனால் இது கடன் பொறி என இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறியுள்ளன.

எரிபொருள், மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி, மின்சார உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை என மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு கடனில் சுமார் 10 சதவிதம் சீனாவிடம் இருந்து வாங்கியவையாகும்.

Also Read: இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு.. பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் இடையே கையெழுத்து..?

அந்நிய செலாவணி இல்லாததால் இறக்குமதி தடை பட்டுள்ளது. இலங்கையின் உள்ளுர் செய்திகளின்படி, கடந்த ஞாயிற்றுகிழமை பெட்ரோல் பங்கிற்கு வெளியே வரிசையில் நிற்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் 29 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சனிக்கிழமை அன்று 70 வயதுடைய நபர் பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் சோர்வு காரணமாக உயிரிழந்தார்.ட

Leave a Reply

Your email address will not be published.