தமிழகத்திற்கு அருகே உள்ள தீவில் வளர்ச்சி பணி மேற்கொள்ள சீனாவிற்கு இலங்கை அனுமதி..

இலங்கையில் பல திட்டங்களை சீனா மேற்கொண்டு வரும் நிலையில் அந்த வரிசையில் இந்திய பெருங்கடல் பகுதியில் தமிழகத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நைனா தீவு, டெல்ப்ட் தீவு, அனலை தீவு ஆகிய தீவுகளை கலப்பு புதுப்பிக்கதக்க திட்டங்களுக்காக சீனாவிடம் வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் தனது இருப்பை அதிகரித்துவரும் சீனாவால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளது. சீனா ஏற்கனவே ஹம்பந்தோட்டா துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மேலும் தலைநகர் கொலும்பு அருகே உலக தரத்திலான நகரத்தை சீனா கட்டி வருகிறது.

இந்த நகரம் தொடர்பாக எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பையும் இலங்கை அரசு சம்பாதித்துள்ளது. இந்த புதிய நகர கட்டுமானத்திற்கு சீனா சீனர்களையே பயன்படுத்துவதால் அங்கு உள்ள இலங்கை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்த திட்டத்திற்காக பல மில்லியன் கணக்கில் இலங்கைக்கு கடனாக சீனா வழங்கியுள்ளது. இலங்கைக்கு கடன் கொடுத்து அந்த நகரத்தை கட்டமைக்கும் டெண்டரையும் சீன கம்பனிகளே எடுத்துகொண்டுள்ளன. மேலும் அதனை கட்டமைப்பதிலும் சீனர்களே ஈடுபடுத்தப்படுவதால் சீனா வழங்கிய கடன் சீனாவிற்கே திரும்பி சென்றுவிடுகிறது. இதனால் இலங்கைக்கு எந்த லாபமும் இல்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதேபோல் பாகிஸ்தானிற்கும் கடன் கொடுத்து கைபர் பக்துவான் மகாணத்தில் கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகிறது சீனா. இதனால் வேலைவாய்ப்பு கிடைக்காததால் சீனர்கள் மீது பாகிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதேபோல் இலங்கையிலும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கை அரசு சில நாட்களுக்கு முன்பு தான், உணவு அவசர நிலையை அறிவித்தது. இது இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் கோத்தபய ராஜபக்சேவின் தவறான பொருளாதாரமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் இலங்கை அரசு தற்போது நைனா, டெல்ப்ட் மற்றும் அனலை தீவுகளையும் வளர்ச்சி பணிக்காக சீனாவிடம் வழங்கியுள்ளது. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் கூறும்போது, இந்த தீவுகளில் உள்ள நிலங்கள் தமிழர்களுக்கு சொந்தமானது. இங்கு மின்வாரியத்திற்காக என்று சொல்லியே நிலம் பெறப்பட்டது. தற்போது இந்த நிலைத்தை இலங்கை அரசு சீனாவிற்கு கொடுத்து இருப்பது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.