இந்திய கடற்படைக்காக P-75 நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் பங்கேற்க உள்ள ஸ்பெயின் மற்றும் தென்கொரியா..?

ப்ராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ் 6 நவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முன்மொழிவு கோரிக்கையை இந்தியா ஜூலை 2021 ல் வெளியிட்டது. இந்த திட்டத்தில் இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறிய நிலையில், தென்கொரியா மற்றும் ஸ்பெயின் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

இந்தியா இந்த 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களையும் AIP தொழில்நுட்பத்துடன் உருவாக்க முன்மொழிந்துள்ளது. இந்த AIP தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் இந்த தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுடிகின்றன.

நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பதற்கான கோரிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டுட்ட நிலையில் காலக்கெடு இந்த வருடம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், காலக்கெடுவை நவம்பர் 30, 2022 வரை நீட்டித்து பாதுகாப்பு அமைச்சகம் முன்மொழிவுக்கான கோரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் தென்கொரியா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவில் உள்ள வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து 40,000 கோடி செலவில் இந்திய கடற்படைக்கு 6 காற்று சுயாதீன உந்துவிசை (AIP) டீசல் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க இந்தியாவின் மசகோவான் டாக்ஸ் லிமிடெட் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய நிறுவனங்களை இந்தியா அடையாளம் கண்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, தென்கொரியாவின் டேவூ ஷிப் பில்டிங் அண்ட் மரைன் இன்ஜினியரிங் மற்றும் ஸ்பெயின் நிறுவனமாக நவண்டியா ஆகிய நிறுவனங்கள் ப்ராஜெக்ட் 75 திட்டத்தின்கீழ் AIP தொழில்நுட்ப டீசல் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க ஆர்வம் காட்டியுள்ளன. இந்த திட்டத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேற முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவின் ரோசோபோரோனெக்ஸ்போர்ட் மற்றும் ஜெர்மனியின் டிகேஎம்எஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் மீதமுள்ள இரண்டு நிறுவனங்களான தென்கொரியா மற்றும் ஸ்பெயின் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. தென்கொரிய நிறுவனமான டேவூ ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு முதல் AIP தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களை இயக்கி வருகிறது.

ஸ்பெயினின் ஐசக் பெரல் ஏப்ரல் 22, 2021 ல் கார்டகேனா கப்பல் கட்டும் தளத்தில் AIP தொழில்நுட்ப நீர்மூழ்கி கப்பலை தொடங்கியுள்ளது. இந்த 2 நீர்மூழ்கி கப்பல்களிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் உள்ளன. எனவே இந்த இரண்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து நீர்மூழ்கி கப்பல்ளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AIP தொழில்நுட்பம் என்பது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களுக்கு மாற்றாக உள்ள தொழில்நுட்ப மாகும். சாதாரண டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் அதன் டீசல் பேட்டரிகளை சார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு ஒரு முறை மேலே வரவேண்டும். ஆனால் AIP தொழில்நுட்ப டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் மேலே வரும் மற்றும் சத்தமும் குறைவாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.