குவாட் கூட்டமைப்பில் இந்தியாவிற்கு மாற்றாக தென்கொரியா..?

ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யா உடனான உறவை தொடர்ந்து வருகிறது. இது குவாட் நாடுகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்தியாவிற்கு மாற்றாக தென்கொரியா இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியா நீண்ட காலமாக யாருடனும் சேராமல் தனித்து நிற்கிறது. அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கும் அதேநேரத்தில் அண்டை நாடான சீனாவுடனும் நெருக்கமாக உள்ளது. தென்கொரியா ஒரு பொருளாதார டைனமோ மற்றும் முன்னனி இராணுவ தளவாட ஏற்றுமதியாளராகவும் உள்ளது. தற்போதைய ஜனாதிபதி மூன் ஜே, கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவுடன் ஒப்பிடும் போது ஏவுகணை பரிசோதனையில் பின்தங்கியே உள்ளது. ஆனால் புதிதாக வரக்கூடிய ஜனாதிபதி யூன் சுக் இயோல், தெனிகொரியாவை ஆயுத துறையில் அடுத்த இடத்திற்கு கொண்டு செல்வார் என கூறப்படுகிறது

ரஷ்யா உடனான இந்தியாவின் வலுவான உறவு குவாட் கூட்டமைப்பில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. குவாட் கூட்டமைப்பானது சீனாவை மையப்பபடுத்தி உருவாக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இந்திய அமெரிக்க அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா உடனான உறவு குறித்து இந்தியாவை அமெரிக்கா எச்சரித்தாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்டன், இந்தியாவின் மனித உரிமைகள் குறித்து நாங்கள் கவலைப்படுவதாக தெரிவித்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடக்கும் மனித உரிமைகள் பற்றி கவலைப்படுவதாக தெரிவித்தார். மேலும் செய்தியாளர்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து கேள்வி கேட்டபோது, ஐரோப்பியா ஒரு நாள் மதியம் இறக்குமதி செய்யும் எண்ணையை தான் இந்தியா ஒரு மாதத்திற்கு இறக்குமதி செய்வதாக தெரிவித்து இருந்தார்.

அடுத்த மாதம் பதவி ஏற்க இருக்கும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல், விரிவுப்படுத்தப்பட்ட G7 கூட்டங்களில் கொரியா ஒரு வழக்கமான விருந்தினராக மாறுவதை போலவே, குவாட் கூட்டமைப்பில் சேருவதை நேர்மறையாக மறு ஆய்வு செய்ய தனது விருப்பத்தை அறிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் விரிவான மூலோபாய ஒத்துழைப்பை தொடர ஜோ பிடன் மற்றும் நரேந்திர மோடி முடிவெடுத்தனர். மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடனும், ரைசினா உரையாடலுக்காக வந்திருந்த ஐரோப்பிய யூனியன் தலைவருடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது.

இருப்பினும் மேற்கத்திய நாடுகள் இந்தியாவுடன் நெருக்கம் காட்டவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ரஷ்யா உடனான தனது வலுவான பாதுகாப்பு உறவுகளை தேசிய பாதுபாப்பு விஷயமாக இந்தியா பராமரிக்கும் என தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோல் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியாவின் அணுகுமுறை நமது தேசிய நம்பிக்கைகள் மற்றும் நமது தேசிய மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும் என கூறினார்.

இந்தநிலையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர மோதல் தென்கொரியா மீது கவனத்தை திருப்பியுள்ளது. தற்போது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் அமெரிக்காவிற்கு ஆதரவாகவும், சீனாவிற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது நாட்டின் வான் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்காவின் தாட் அமைப்பை வாங்குவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மேலும் தென்கொரியா 46 பில்லியன் அளவுக்கு ஆயுத சந்தையை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு 7 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

Also Read: இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள்.. முதல் 3 இடத்திற்குள் இந்தியா..

தென்கொரியா ஐரோப்பா முதல் ஆஸ்திரேலியா வரை முக்கிய வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன. ஸ்டாஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், கொரிய பிராந்தியத்தில் பாதுகாப்பு உபகரணங்களில் 7வது பெரிய சப்ளையராக உள்ளது. குறிப்பாக இந்தோனேசியாவிற்கு 2 நீர்மூழ்கிக்கப்பல்கள், 5 AALS மற்றும் 16 பயிற்சி போர்விமானங்களை வழங்கியுள்ளது.

மேலும் பிலிப்பைன்ஸுக்கு 12 போர் விமானங்களையும், தாய்லாந்திற்கு 1 போர்கப்பல் மற்றும் 4 பயிற்சி மற்றும் போர் விமானங்களையும் வழங்கியுள்ளது. 2010க்கு பிறகு பிலிப்பைன்ஸ்க்கு 400 மில்லியன் டாலர் மதிப்பிலான FA-50 போர் விமானத்தை இறுதி செய்தது. கொரியாவின் டேவூ கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் மரைன் இன்ஜினியரிங் ஆகியவை, 6 சாங் போகோ வகுப்பு டீசல் மின்சார தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை இந்தோனேசியாவுக்கு விற்பனை செய்துள்ளது.

Also Read: ஆறாம் தலைமுறை போர் விமான தயாரிப்பில் இணைய உள்ள இந்தியா..?

ஹுண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் இரண்டு ஜோஸ் ரிசால் வகுப்பு போர்கப்பல்களை பிலிப்பைன்ஸ்க்கு விற்பனை செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் தவிர இந்தோனேசியா மற்றும் தாய்லாந்திற்கு டி-50 ஜெட் பயிற்சி விமானங்களை வழங்கியுள்ளது. மேலும் 4.5 ஆம் தலைமுறை போர் விமானமான KF-2 ஆனது தென்கொரியா மற்றும் ஜகார்த்தா இடையே கூட்டு தயாரிப்பாகும்.

தென்கொரியா அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் நீண்டகால முதலீடுகளை செய்துள்ளது. எனவே குவாட் ப்ளஸ் மற்றும் ஜி-7 ப்ளஸ் கூட்டமைப்பில் தென்கொரியா இணைய அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் தென்கொரியா குவாட் கூட்டமைப்பில் இந்தியாவிற்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read: பாக். கராச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண்.. 3 சீனர்கள் உயிரிழப்பு..

Leave a Reply

Your email address will not be published.