இந்தியாவின் சீன செயலி தடையால் 16 பில்லியன் டாலரை இழந்த சிங்கப்பூர் நிறுவனம்..!

இந்த வார துவக்கத்தில் மத்திய அரசு ஃபிரீ ஃபயர் உட்பட 54 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இதனால் ஃபிரீ ஃபயர் தாய் நிறுவனமான சீ லிமிடெட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனம் பங்குசந்தையில் 16 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.

சிங்கப்பூரை தளமாக கொண்ட சீ நிறுவனம் ஆசியாவின் மதிப்புமிக்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் நியூயார்க் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு தடை விதித்தால் ஒரே நாளில் 18 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது.

சீ நிறுவனத்தின் ஃபிரீ ஃபயர் ஆனது சீன செயலி கிடையாது. ஆனால் சீ நிறுவனத்தில் சீனா முதலீடு செய்துள்ளது. இதனை மேற்கோள் காட்டி மத்திய அரசு சிங்கப்பூர் நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளது. இது சீன நிறுவனதிற்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூர் நிறுவனத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீ நிறுவனத்தின் நிறுவனர் ஃபாரெஸ்ட் லி, சீனாவில் பிறந்து தற்போது சிங்கப்பூர் குடியுரிமை பெற்று சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சீயின் மிகப்பெரிய பங்குதாரராக சீனாவின் டென்சென்ட் ஹொல்டிங்ஸ் லிமிடெட் உள்ளது.

இதனை தொடர்ந்து சீ நிறுவனத்தின் இ-காமர்ஸ் வணிகப்பிரிவான ஷோபியும் தடை விதிக்கப்படலாம் என அந்நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த தடை மறைமுகமாக உலகிற்கு ஒன்றை கூறுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது சீன நிறுவனங்களை மட்டுமல்லாமல் சீனா முதலீடு செய்யும் நிறுவனங்களும் தடை விதிக்கப்படலாம் என்பதுதான்.

இதனால் உலகின் மற்ற நிறுவனங்கள் சீன நிறுவனங்களிலோ அல்லது சீன நிறுவனங்கள் உலகின் மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்ய அந்நிய நிறுவனங்கள் தயக்கம் காட்டும். இதனால் சீன முதலீட்டை மற்ற நிறுவனங்கள் தவிர்க்கும் நிலை ஏற்படும்.

இந்தியாவை பின்பற்றி மற்ற நாடுகளும் சீன செயலியை தடை விதித்தால், சீனாவிற்கு இது மிகப்பெரிய அடியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவின் இந்த தடையால் சீ நிறுவனத்தில் சீனாவின் டென்சென்ட்ட நிறுவனம் 40 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில் அதனை 10 சதவீதமாக குறைக்க சீ நிறுவனம் முயன்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.