கன்ஹையா கொலை: மதரஸாக்கள் தலையை துண்டிப்பது மட்டுமே தண்டனை என கற்பிக்கின்றன: கேரள ஆளுநர் ஆரிப்கான்
கேரள ஆளுநர் ஆரிப் கான், உதய்பூரை சேர்ந்த இந்து தையல் தொழிலாளியான கன்யையா லால் இரண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ளார். மதரஸாக்களில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அறிகுறிகள் வரும் போது நாங்கள் கவலைப்படுகிறோம், ஆனால் ஆழமான நோயை கவனிக்க தவறுகிறோம். மதரஸாக்களில் குழந்தைகளுக்கு நிந்தனைக்கான தண்டனை தலை துண்டிக்கப்படுவது என கற்பிக்கப்படுகிறது. இது கடவுளின் சட்டம் என கற்பிக்கப்படுகிறது. அங்கு என்ன கற்பிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் கான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதற்காக கன்ஹையா லால் என்ற இந்து தையல்காரர் நேற்று முகமது ரியாஸ் அக்தர் மற்றும் முகமது கோஸ் என்ற அடையாளம் காணப்பட்ட இரண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
முன்னதாக கன்ஹையா லால் தனது அண்டை வீட்டாரான நசீம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த பதிவுக்காக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வெளிவந்துள்ளன. நசீம் உட்பட 5 அல்லது 6 பேர் தொடர்ந்து தனது கடையை நோட்டமிட்டதை அவர் கவனித்துள்ளார்.
மேலும் தையல் கடையை திறக்க வேண்டாம் என அவருக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது. கன்ஹையா லால் தன்னை மிரட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை அணுகியுள்ளார். மேலும் கடையை திறக்க போலிஸ் பாதுகாப்பையும் கோரியுள்ளார். போலிசார், அச்சுறுத்தியவர்களை கைது செய்வதற்கு பதிலாக, அவர்களை அழைத்து சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்தனர்.
Also Read: முகமது நபி சர்ச்சை: நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்..
இந்த நிலையில் அதே நாளில் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என மற்றொரு விண்ணப்பத்தை சமர்பித்துள்ளார். உயிருக்கு பயந்து கன்ஹையா லால் தனது கடையை 6 நாட்கள் மூடி உள்ளார். பின்னர் இறுதியாக கடையை திறக்க முடிவு செய்து கடையை திறந்த நிலையில், நேற்று வாடிக்கையாளர் போல் வந்த இரண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
Also Read: கன்ஹய்யா கொலை: இந்தியா இந்துக்களின் நாடு, இஸ்லாமிய நாடு அல்ல: நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்
பின்னர் இந்த வீடியோவை சமூகவலைத்தலங்களில் வெளியிட்டு இந்த கொலையை செய்தது தாங்கள் தான் என கூறியுள்ளனர். அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாலையில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது.
Also Read: முகமது நபி தொடர்பாக இந்தியா மன்னிப்பு கேட்க தேவையில்லை: கேரள ஆளுநர் ஆரிப்கான்