பாகிஸ்தானில் 2 இந்து சிறுமிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..

பாகிஸ்தானின் 2 இந்து சிறுமிகள் துப்பாக்கி முனையில் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவன் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான சம்பவம் தினமும் அதிகரித்து வருகிறது. இந்து பெண்கள் குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பாகிஸ்தானில் இந்து கோவில்களை இடிப்பது. இந்து பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்வது, இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி கட்டாய திருமணம் செய்வது என பல அட்டுழியங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு இந்து சகோதரிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். போலிஸ் அதிகாரி இர்ஷாத் யாகூப் தகவலின் படி, ஜூன் 5 ஆம் தேதி 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சகோதரிகள் பஹவல்நகர் போர்ட் அப்பாஸ் பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு வயல்வெளிக்கு சென்றுள்ளனர்.

அப்போது இருவர் இரண்டு சகோதரிகளையும் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலிசார் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் உமைர் அஷ்ஃபாக் மற்றும் காஷிப் அலி என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு இருவரும் தப்பியோடியுள்ளதாக போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரண்டு சிறுமிகளின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இர்ஷாத் யாகூப் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை உடனடியாக கண்டுகொள்ளாத போலிசார், மூன்று நாட்கள் தாமதத்திற்கு பிறகு தான் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளில் ஒருவனான காஷிப் அலி செல்வாக்கு மிக்க குடும்பம் என்பதால் இந்த வழக்கை போலிசார் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

காஷிப் அலி குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் பிரச்சனையை தீர்த்து கொள்ள முயன்றுள்ளனர். இதனால் தான் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இருப்பினும் மூன்று நாட்களுக்கு பிறகு சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் இருவர் மீதும் FIR பதிவு செய்யப்பட்டது.

Also Read: பாகிஸ்தானில் யுனிஃசெப் அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்த பாதுகாவலர்..

குற்றம்சாட்டப்பட்ட உமைர் அஷ்பக் என்பவனை போலிசார் கைது செய்துள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியான காஷிப் அலி தனது செல்வாக்கை பயன்படுத்தி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாகாணத்தில் இந்து பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்த இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவர் காதலை ஏற்று கொள்ளாததால் அந்த பெண்ணை சுட்டுக்கொன்றார்.

Leave a Reply

Your email address will not be published.