இராணுவ வீரரின் மகளுக்கு பாலியல் தொல்லை.. நடவடிக்கை எடுக்காமல் காவல் ஆய்வாளர் அலட்சியம்

தஞ்சாவூர் வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் பேரிடர் மேலாண்மைத்துறை பேராசிரியராக ஸ்ரீலால் பாண்டியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது தஞ்சை பிலோமினாள் நகர் பகுதியில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் வல்லம் டிஎஸ்பியிடம் கடந்த 28ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் தனது மகள் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், 2ஆம் ஆண்டு Bsc படித்து வருவதாகவும் அவரது செல்போனுக்கு பேராசிரியர் ஸ்ரீலால் பாண்டியன், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதோடு மட்டுமல்லாமல், வாட்ஸ்அப்பில் ஆபாச புகைப்படங்களை அனுப்புவதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த பேராசிரியரின் பாலியல் தொல்லையால் தனது மகளும் அவரது தோழியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பதாகவும் இராணுவ வீரர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க டிஎஸ்பி உத்தரவிட்டார். ஆனால், இந்த புகார் மீது சிஎஸ்ஆர் கூட தராமல் தொடர்ந்து அலைகழிப்பதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி, பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரம் விசாரித்து விட்டு ஜனவரி 4ஆம் தேதி காவல்நிலையம் வருமாறி கூறி சென்றுள்ளார்.

கடந்த 4ஆம் தேதி வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தனது மகளுடன் சென்ற இராணுவர் வீரரை காலையில் இருந்து இரவு வரை காத்திருக்க வைத்து விசாரணை நடத்தாமல் அனுப்பியுள்ளனர்.

இதனிடையே பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதை அடுத்து அவசர அவசரமாக, பேராசிரியர் ஸ்ரீலால்பாண்டியனை பெரியார் மணியம்மை பல்கலைகழகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

மேலும் வல்லம் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி பேராசிரியர் மீது புகார் கொடுக்கப்பட்ட போதே நடவடிக்கை எடுக்காமால் வேண்டும் என்றே பாதிக்கப்பட்ட பெண்ணையும், இராணுவ வீரரையும் அலையவிட்டதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

One thought on “இராணுவ வீரரின் மகளுக்கு பாலியல் தொல்லை.. நடவடிக்கை எடுக்காமல் காவல் ஆய்வாளர் அலட்சியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *