அமெரிக்காவில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க உள்ள சீரம் நிறுவனம்..?

சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தை அமெரிக்காவில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி பெற அமெரிக்க அதிகாரிகளுடன் சீரம் நிறுவனம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு மூலப்பொருள் தேவைப்படுவதால் அஸ்ட்ராஜெனிகாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப்பொருள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவிலும் கோவிஷீல்டு மற்றும் கோவோவாக்ஸ் தடுப்பூசியையும் உற்பத்தி செய்ய சீரம் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. கோவோவாக்ஸ் தடுப்பூசி அமெரிக்க நிறுவனமான மேஜர் நோவாக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

தற்போது கோவோவாக்ஸ் தடுப்பூசியையும் சீரம் நிறுவனம் தயாரிக்க அனுமதி கோரியுள்ளது. கோவோவாக்ஸ் தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனம் மற்றும் மேஜர் நோவாக்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து இந்தியா உட்பட தேவைப்படும் நாடுகளுக்கு வழங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் கோவோவாக்ஸ் தடுப்பூசியும் இந்தியாவிற்கு வழங்கப்படும் என சீரம் நிறுவன தலைவர் பூனவாலா குறிப்பிட்டுருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *