தனது முதல் யோகா திருவிழாவை நடத்திய சவூதி அரேபியா.. 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

நாட்டின் முதல் யோகா திருவிழாவை சவுதி அரேபியா ஜனவரி 29 அன்று தொடங்கியது. இந்த யோகா திருவிழா பிப்ரவரி 1 வரை நடைபெற உள்ளது. இந்த யோகா திருவிழா சவூதி அரேபியாவின் கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டியில் உள்ள ஜுமான் பூங்காவில் நடந்து வருகிறது.

இதில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த யோகா திருவிழா சவூதி யோகா கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சவூதி யோகா கமிட்டி என்பது யோகாவை சவூதி அரேபியாவில் ஊக்குவிப்பதற்காக மே 16, 2021 அன்று சவூதி ஒலிம்பிக் கமிட்டி மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட ஒரு அரசு அமைப்பாகும்.

இந்த சவூதி யோகா கமிட்டியின் தலைவராக நௌஃப் பின்ட் முஹம்மது அல்-மரூயி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு யோகா தினத்தன்று சவூதி மற்றும் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த விழாவில் யோகா பயிற்சி, யோகா தொடர்பான பல்வேறு கலை நிகழ்ச்சி, ஸ்டுடியோ டெமோக்களை பார்ப்பது மற்றும் அவற்றை அறிந்து கொள்வது உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இந்த யோகா நிகழ்ச்சியில் 10 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சவூதி யோகா கமிட்டியின் தலைவர் நௌஃப் முஹம்மது கூறுகையில், பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் உற்சாகத்தால் வியப்படைந்ததாக தெரிவித்துள்ளார். திருவிழா மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

சவூதி மக்கள் இதனை ஏற்றுகொண்டது மட்டுமல்லாமல் நிகழ்வின் ஒரே நோக்கமான யோகா பற்றிய எங்கள் எண்ணங்களையும் ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் நாட்டில் யோகாவை ஊக்குவிக்க விரும்புகிறோம். சவூதி மக்கள் தங்கள் நாளை யோகாவுடன் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்ந நிகழ்ச்சியில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இந்திய யோகா ஆசிரியர் இரும் கானும் கலந்து கொண்டார். அவர் 2008 ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் யோகா கற்பித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.