இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வரும் S-400..?

இந்த ஆண்டு இறுதிக்குள் வான்வழி ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான S – 400 இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடும் என ரஷ்ய வான் மற்றும் விண்வெளி பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்ற போது 5.43 பில்லியன் டாலர் மதிப்பில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் படி தற்போது S-400 இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த S-400 அமைப்பை இயக்குவதற்கான பயிற்சியை இந்திய வீரர்கள் ரஷ்யாவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் ஒரு குழு பயிற்சியை முடித்துவிட்டதாகவும் அடுத்த குழுவுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் S-400 அமைப்பை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா வாங்கியுள்ளது. அதேபோல் ரஷ்யா S-400 தொடர்பாக துருக்கி உடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ரஷ்யாவும் துருக்கியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மேலும் நேட்டோ உறுப்பு நாடு ஒன்று S-400 வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்கும் முதல் ஐரோப்பிய நாடு துருக்கி ஆகும். இது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.