ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது..?

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி இந்தியாவில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் இந்தியாவின் மருந்து நிறுவனமான சஞ்சீவி பயோடெக் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் ஏற்கனவே புனேவை சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதனை தொடர்ந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்திய மருந்து நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சஞ்சீவ் பயோடெக் நிறுவனத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. அதன் முதல் தொகுதி தரச்சோதனைக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட உள்ளது.

சஞ்சீவ் பயோடெக் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெயின் கூறும்போது, இற்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என கூறியுள்ளார். மேலும் முதலில் இந்தியாவுக்கும் பின்னர் உலகம் முழுவதும் தேவையான நாடுகளுக்கு தயாரித்து வழங்கப்படும் என அவர் கூறினார்.

இந்தியாவின் சஞ்சீவ் பயோடெக் நிறுவனத்துடன் மட்டுமல்லாமல் ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டி நிறுவனத்துடனும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் கூட்டு சேர்ந்துள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உலகம் முழுவதும் 66 நாடுகள் பயன்படுத்துகின்றன. மேலும் இவை 97.6 சதவீத செயல்திறன் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *