இந்த மாத இறுதியில் இந்தியா வரும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி..?

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அவசரகால அனுமதி அளித்ததை அடுத்து இந்த மாதம் இறுதியில் ஸ்புட்னிக் V தடுப்பூசி இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசுகிறது. நாள்தோறும் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசியை தொடர்ந்து இப்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தடுப்பூசியை உலகம் முழுவதும் 59 நாடுகள் அனுமதி அளித்துள்ள நிலையில் 60 வது நாடாக இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்த ஸ்புட்னிக் தடுப்பூசியில் மற்ற தடுப்பூசி போலவே சாதாரண பக்க விளைவுகள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்தான பக்க விளைவுகள் ஏதும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களில் 5 சதவீதம் பேர் ஊசி போடப்பட்ட இடத்தை சுற்றி சிவப்பாக இருந்ததாகவும், லேசான தலைவலி இருந்ததாகவும் கூறியுள்ளனர். இது தவிர வேறு எந்த பக்கவிளைவுகளும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் V தடுப்பூசி டாக்டர் ரெட்டி ஆய்வகங்களில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அதனை இந்தியாவிலேயே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *