இந்தியா, சீனாவிற்கு ரஷ்யாவின் எண்ணெய் விநியோகம் அதிகரித்து வருகிறது: ரஷ்ய அதிபர் புதின்

புதன்கிழமை நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வீடியோ வாயிலாக பேசி ரஷ்ய அதிபர் புதின், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்ரிக்கா உடனான வர்த்தகம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அரசியல் ரீதியான தடைகளையும் தாண்டி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய புதின், இந்தியா மற்றும் சீனாவுக்கான ரஷ்ய எண்ணெய் விநியோகம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரிக்ஸ் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்ரிக்கா உடனான வர்த்தகம் முதல் மூன்று மாதங்களில் 38 சதவீதம் உயர்ந்து 45 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ரஷ்ய எண்ணெய் விநியோகம் அதிகரித்து வருகிறது. பிரிக்ஸ் நாடுகளுக்கு ரஷ்ய உரத்தை ஏற்றுமதி செய்வது போல் விவசாய ஒத்துழைப்பும் வளர்ந்து வருவதாக புதின் தெரிவிதுள்ளார். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துமாறு புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடை ரஷ்ய பொருளாதாரத்தை குறிப்பிட்ட அளவு பாதித்துள்ளதாக தெரிவித்துள்ள புதின், டாலர் மற்றும் யூரோவை சார்ந்திருப்பதை குறைக்க, மாற்று சர்வதேச பறிமாற்ற வழிமுறைகளை ரஷ்யா ஆராய்ந்து வருவதாக புதின் தெரிவித்துள்ளார்.

Also Read: சீனாவின் பெட்ரோகெமிக்கல் ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து.. ஒருவர் உயிரிழப்பு…

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஆரம்பித்தன. மே மாதத்தில் இந்தியா ஒரு பீப்பாய்க்கு 35 சதவீத தள்ளுபடியுடன் 70 டாலர் என்ற விலையில் இறக்குமதி செய்தது. மோதல் தொடங்கியதில் இருந்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 40 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் இறக்குமதி செய்துள்ளது.

Also Read: சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக ஈரான் வழியாக இந்தியாவிற்கு சரக்குகளை அனுப்பும் ரஷ்யா..?

இது 2021 ஆம் ஆண்டு முழுவதும் இறக்குமதி செய்த கச்சா எண்ணெயை விட அதிகம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு கச்சா எண்ணெயை ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியது. தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றில் பாதியை ஆசியாவிற்கு அனுப்பி வருகிறது. அவற்றில் குறிப்பிட்ட அளவு இந்தியா வழியாக அமெரிக்காவிற்கும் செல்வதாக கூறப்படுகிறது.

Also Read: சீனாவை விட இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறிய அமெரிக்கா..!

Leave a Reply

Your email address will not be published.