இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக உருமாறிய ரஷ்யா..?

மே மாதத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக ரஷ்யா உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த சவூதி அரேபியா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா பெரும்பாலும் அரபு நாடுகளிடம் இருந்தே கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்துவரும் நிலையில், மே மாதத்தில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 819,000 பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்துள்ளன. இது இதுவரை எந்த மாதத்திலும் இல்லாத வகையில் அதிகபட்சமாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 277,000 பீப்பாய் கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்த நிலையில் கடந்த மாதம் அது உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவின் எண்ணெய் சப்ளையராக ஈராக் தொடர்ந்து முதல் இடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சவூதி அரேபியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

உக்ரைன் ரஷ்யா மோதலால் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்ததால், ரஷ்யா கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் அதிகமான சரக்கு செலவு காரணமாக ரஷ்யா எண்ணெயை இந்தியா தவிர்த்து வந்த நிலையில், தள்ளுபடி விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் வழங்கியதால் தற்போது ரஷ்யா உடனான எண்ணெய் வர்த்தகம் அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 16.5 சதவீதமாக உள்ளது. மத்திய கிழக்கில் இருந்து சுமார் 59.5 சதவீதமும், மற்ற நாடுகளில் இருந்து 20.5 சதவீதமாகவும் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஆப்ரிக்க நாடுகளின் பங்கு 5.9 சதவிதத்தில் இருந்து 11.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Also Read: இந்தியா, துருக்கி இடையேயான இருதரப்பு வர்த்தகம் 10 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை..

ரஷ்ய எண்ணெயை தவிர, மத்திய கிழக்கு எண்ணெயின் அதிகாரப்பூர்வ விற்பனை விலையும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை நைஜிரிய கச்சா எண்ணெயை வாங்க ஒரு காரணம் ஆகும். மே மாதத்தில் இந்தியாவின் இறக்குமதிகள் மொத்தம் 4.98 மில்லியன் bpd ஆக இருந்தது.

Also Read: கூடங்குளம் அணுஉலைக்கு அதிக திறன் கொண்ட TVS-2M அணு எரிபொருளை வழங்கிய ரஷ்யா..?

ஏனெனில் உள்ளுர் தேவை அதிகமாக இருந்ததால் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏற்றுமதியில் இருந்து லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்தியதாலும் இறக்குமதி அதிகரிக்க துவங்கியது. மே மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் மாதத்தை விட 5.6 சதவீதமும், முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Also Read: இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து..?

Leave a Reply

Your email address will not be published.