ஈரானிடம் ஆளில்லா ட்ரோன்களை தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வாங்கும் ரஷ்யா..

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் ரஷ்யாவிற்கு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரியில் இருந்து ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவுக்கு பெரும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் ரஷ்யாவுக்கு தாக்குதல் ட்ரோன்களை ரகசியமாக அனுப்ப ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவிற்கு இரண்டு வகையான ஏவுகணைகள் உட்பட கூடுதல் ஆயுத ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய செப்டம்பர் 18 அன்று ஈரான் ரஷ்யாவிற்கு அதிகாரிகளை அனுப்பியது. ஈரான் தற்போது பதே-110 மற்றும் சோல்ஃபகர் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இந்த குறுகிய தூர ஏவுகணைகள் 300 மற்றும் 700 கிலோமிட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க கூடியது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்லாஹியன், ரஷ்யாவிற்கு எந்த ஆயுதத்தையும் வழங்கவில்லை என அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார். அதேபோல் அக்டோபர் 3 அன்று ஈரானிய் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி, ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

கியாம்-1 குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் புர்கான்-2H ஏவுகணைகளையும் ஈரான் ரஷ்யாவிற்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2020 ஜனவரி அன்று ஈரானின் உயர்மட்ட ஜெனரல் காசிம் சுலைமானியை அமெரிக்க கொன்றதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்தை நோக்கி கியாம் ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது.

தற்போது ரஷ்யா பயன்படுத்தி வரும் கியான்-1 SRBM ஏவுகணையானது சுமார் 800 கிலோமீட்டரில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க கூடியது. ஷாபாப்-3 நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான காதர்-110 ஏவுகணை சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தக்கூடியது .

ரஷ்யா ஏற்கனவே ஈரானிடம் இருந்து ஷாஹெட்-136 ஆளில்லா விமானம் வாங்கிய நிலையில், தற்போது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வாங்கி வருகிறது. ஈரானிடம் மட்டும் அல்லாமல் வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்களை வாங்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.