ஹப்பர்சோனிக் குருஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த ரஷ்யா..

ரஷ்யாவின் கடற்படை ஹைப்பர்சோனிக் குருஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்ய இராணுவம் திங்கள் கிழமை அன்று தெரிவித்துள்ளது.

தற்போது உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது துருப்புக்களை நிறுத்தி உள்ள நிலையில் அமெரிக்காவுடன் சேர்ந்து நேட்டோ படைகளும் உக்ரைன் எல்லையில் தனது படைகளை நிறுத்தி உள்ளன. இருதரப்பிலும் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலைமை மோசமடைந்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஷ்யா வெள்ளை கடலில் தனது சிர்கான் ஹைப்பர்சோனிக் குருஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அந்த ஏவுகணை கடலில் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிர்கான் ஹைப்பர்சோனிக் குருஸ் ஏவுகணை ஒலியை விட ஒன்பது மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது மேக் 8 அல்லது மேக் 9 (6,090-6,851 மைல்) வேகத்தில் செல்லக்கூடியது. இது 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க கூடியது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த ஹப்பர்சோனிக் ஏவுகணை அடுத்த ஆண்டு ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது..

Also Read: பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க இராணுவ தளம்..? சிக்கலில் இம்ரான்கான்.. நேட்டோ, பாகிஸ்தான் இராணுவம் இடையே பேச்சுவார்த்தை..

இந்த சிர்கான் ஹைப்பர்சோனிக் குருஸ் ஏவுகணைகள் ரஷ்ய போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்பட உள்ளது. ரஷ்யா பல்வேறு வகையான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.

Also Read: J-20 விமானத்தில் பழைய எஞ்சினை வைத்து கொண்டு ஐந்தாம் தலைமுறை விமானம் என கூறும் சீனா..

தற்போது ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, வடகொரியா போன்ற நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்ய அதிபர் புதின் 2018 ஆம் ஆண்டு ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் வரிசையை அறிவித்தார். அவை உலகின் எந்த புள்ளியையும் தாக்கலாம் மற்றும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட எந்த பாதுகாப்பு கவசத்தையும் தவிர்க்கலாம் என கூறினார்.

Also Read: புதின் வருகையின் போது ரஷ்ய இராணுவ தளங்களை இந்தியா பயன்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம்..?

Leave a Reply

Your email address will not be published.