முதன்முறையாக மனிதர்களுக்கு பரவும் பறவை காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிப்பு..

மனித இனத்திற்கு H5N8 பறவைக் காய்ச்சல் பரவுவது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு உலக சுகாதார நிறுவனத்தை உஷார் படுத்தியிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

“மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் (H5N8) பரவுவதற்கான உலகின் முதல் வழக்கு பற்றிய தகவல்கள் ஏற்கனவே உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன,” என்று ரஷ்யாவின் சுகாதார கண்காணிப்பு அமைப்பான Rospotrebnadzor தலைவர் அன்னா போபோவா(Anna Popova) தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறினார்.

பறவைகளுக்கு ஏற்படும் இந்த தொற்று நோயானது மிகவும் ஆபத்தானது, ஆனால் இதற்கு முன்னர் மனிதர்களுக்கு பரவியதாக ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை.

ரஷ்யாவின் வெக்டர் ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகள், டிசம்பர் மாதம் பறவைகளிடையே தீவிர நோய் பரவல் ஏற்பட்ட தென் ரஷ்யாவில் உள்ள ஒரு கோழிப் பண்ணையின் ஏழு தொழிலாளர்களிடமிருந்து மரபணுவை தனிமைப்படுத்தி வைத்திருந்ததாக போபோவா கூறினார்.

இருப்பினும் தொழிலாளர்கள் எந்தவொரு கடுமையான பக்க விளைவுகளையும் சந்திக்கவில்லை என அவர் தெரிவித்தார்

மேலும் முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதால் போபோவா இந்த விஞ்ஞான கண்டுபிடிப்பை பாராட்டினார். வைரஸ் மேலும் உருமாற முடியுமா என்பதை “நேரம் சொல்லும்” எனவும் அவர் தெரிவித்தார்.

மனிதரிடமிருந்து மனிதனுக்கு பரவும் திறனை வைரஸ் இன்னும் பெறாதபோது இந்த H5N8 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும், முழு உலகும் தயாராவதற்கும், போதுமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் நேரம் தருகிறது என்று போபோவா கூறினார்.

நோவஸிபிர்ஸ்க் நகருக்கு வெளியே கோல்சோவோவில் அமைந்துள்ள வெக்டோர் ஸ்டேட் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி மையம், ரஷ்யாவின் பல கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளில் ஒன்றை உருவாக்கி உள்ளது.

சோவியத் சகாப்தத்தில், ரகசிய உயிரியல் ஆயுத ஆராய்ச்சியை மேற்கொண்ட இந்த ரகசிய ஆய்வகம், எபோலா முதல் பெரியம்மை வரையிலான வைரஸ்களை இன்னும் சேமித்து வைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *