ஈரானிடம் மேலும் 2,400 ஷாஹெட்-136 ட்ரோன்களை ஆர்டர் செய்த ரஷ்யா..?

ரஷ்யா ஈரானிடம் இருந்து 2,400 ஷாஹெட்-136 ட்ரோன்களை ஆர்டர் செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி செவ்வாய் அன்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய் அன்று ஜி7 உச்சி மாநாட்டில் வீடியோ இணைப்பு மூலம் பேசிய ஜெலன்ஸ்கி, நடுத்தர மற்றும் நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இத்தகைய அமைப்புகள் உக்ரைனுக்கு ஒரு வான் கவசம் போன்று செயல்படும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா போரில் ஷாஹெட்-136 யை பயன்படுத்தியதற்கான முதல் அறிக்கை செப்டம்பரில் வெளியானது. ரஷ்யா இதனை ஜெரான்-2 என்ற பெயரில் பயன்படுத்தி வருகிறது. இந்த மாதம 10 ஆம் தேதி உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா 24 ட்ரோன்களை பயன்படுத்தியது. அவற்றில் 13 ஷாஹெட்-136 ட்ரோன்கள் ஆகும்.

ஷாஹெட்-136 ஆளில்லா விமானம் லோட்டரிங் வெடிமருந்துகள் எனப்படும் வான்வழி ஆயுதங்களின் வகையை சேர்ந்தது. இது காமிகேஸ் அல்லது தற்கொலை ட்ரோன்கள் எனவும் அழைக்கப்படுகிறது. ஷாஹெட்-136 ட்ரோன் 200 கிலோ எடை கொண்டது மற்றும் 2.5 மீட்டர் இறக்கைகள் கொண்டது.

அரசுக்கு சொந்தமான ஈரான் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த ட்ரோன்கள் 2,500 கிலோமீட்டர் வரம்பை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஷாஹெட்-136 இலக்கை அடைந்த உடன் அதனை நிறுத்தவது கடினமாக இருக்கும்.

உக்ரைன் இராணுவ செய்தி தொடர்பாளர் நடாலியா ஹௌமெனியாக் கூறுகையில், ஷாஹெட்-136 ட்ரோன்கள் மிகவும் தாழ்வாக பறப்பதால் அவற்றை கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் அவை செயின்சா அல்லது ஸ்கூட்டர் போன்று அதிக சத்தத்தை எழுப்ப கூடியது. அதாவது அவற்றின் சத்தத்தை தொலைவில் இருந்தே கேட்க முடியும்.

அவற்றின் செயல்திறன் மிகவும் குறைவு என்றாலும் அவை மக்கள் மீது உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என கூறியுள்ளார். ரஷ்யாவின் சொந்த தயாரிப்பான Orlan-10 ட்ரோன்கள் உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதிக ட்ரோன்கள் தேவைப்படுவதால் ரஷ்யா ஈரான் மற்றும் வடகொரியாவில் இருந்து ட்ரோன்களை வாங்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.