சூடானில் இராணுவ தளம் அமைத்து வரும் ரஷ்யா.. சிக்கலில் சீனாவின் BRI திட்டம்..

சூடானில் ரஷ்யா தனது இராணுவ தளத்தை போர்ட் சூடானில் அமைத்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. அப்போது சூடான் ஜனாதிபதி உமர் அல் பஷிர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இடையே இந்த போர்ட் இராணுவ தளம் தொடர்பாக பேச்சுவாத்தை நடைபெற்றது.

பின்னர் ஜனாதிபதி உமர் அல் பஷிர் ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் இராணுவ தளம் தொடர்பான பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டது. புதிய இராணுவ தலைவர் ரஷ்யாவின் இராணுவ தளம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்தார். ரஷ்யாவிடம் இருந்து சூடான் சு-30, வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை வாங்க இருப்பதால் ஒப்பந்தம் விரைவுபடுத்தப்பட்டது.

சூடானில் ரஷ்யாவின் ஆதிக்கத்தால் எரிச்சலடைந்த அமெரிக்கா இந்த திட்டத்தை முறியடிக்க முயற்சி செய்தது. இருப்பினும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியவில்லை. தற்போது அமெரிக்காவிற்கு டிஜிபூட்டியில் மட்டுமே இராணுவம் உள்ளது. அதேநேரம் டிஜிபூட்டியில் ரஷ்யாவும் உள்ளது

ரஷ்யா இந்த ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தியால் இயங்கும் கப்பல்களை நிலைநிறுத்தும் திறன் கொண்ட தளத்தை உருவாக்க உள்ளது. இந்த தளம் ரஷ்யாவிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும் என கூறப்படுகிறது. சூடானின் கடல் வர்த்தகத்தில் 90 சதவீதம் இந்த போர்ட் சூடான் துறைமுகம் வழியாகதான் நடைபெறுகிறது.

மேலும் சீனாவின் எற்றுமதி இறக்குமதி பெரும்பாலும் இந்த துறைமுகம் வழியாதாக செல்கிறது. அதேநேரம் சீனா எரித்திரியாவில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறது. ரஷ்யா இப்பகுதியை கட்டுப்படுத்தும் நிலையில் அது சீனாவின் BRI திட்டத்திற்கு பின்னடைவாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.