விண்வெளியில் சாட்டிலைட்டை தாக்கி அழித்த ரஷ்யா.. அமெரிக்கா எச்சரிக்கை..

ரஷ்யா திங்கள்கிழமை அன்று விண்வெளியில் தனது சொந்த சாட்டிலைட் ஒன்றை தாக்கி அழித்து ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. இந்த சோதனைக்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ரஷ்யா தற்போது நடத்தி உள்ள சோதனை மூலம் விண்வெளியில் குப்பை அதிகமாகி உள்ளது. இந்த குப்பையினால் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்து ஏற்படும் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளன.

தற்போது ரஷ்யா நடத்திய இந்த சாட்டிலைட் எதிர்ப்பு சோதனை மூலம் தனது சொந்த சாட்டிலைட் ஒன்றை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. ஆனால் அழிக்கப்பட்ட சாட்டிலைட் 1500க்கும் மேற்பட்ட பெரிய பெரிய துண்டுகளாக அல்லது துகள்களாக உடைந்து அது விண்வெளியை சுற்றி வருகிறது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறிய சிறிய துகள்கள் அல்லது தூசுகளும் விண்வெளியை சுற்றி வருகின்றன.

இந்த விண்வெளி துகள்கள் மற்ற நாடுகளின் சாட்டிலைட் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் சர்வதேச விண்வெளி மையத்தின் மீதும் மோதி பாதிப்பை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் நான்கு அமெரிக்க வீரர்கள், ஒரு ஜெர்மன் வீரர் மற்றும் இரண்டு ரஷ்ய வீரர்கள் உள்ளன.

இந்த சாட்டிலைட் தாக்கி அழிக்கப்பட்டவுடன் அதன் துகள்கள் சர்வதேச விண்வெளி மையத்தின் அருகில் வந்ததால் அனைத்து வீரர்களும் காப்ஸ்யூல்களில் சென்று பாதுகாப்பாக இருந்தனர். சுமார் 90 நிமிடங்கள் அனைத்து வீரர்களும் காப்ஸ்யூல் உள்ளே இருந்தனர். இந்த 90 நிமிடங்களில் உடைந்த சாட்டிலைட்டின் பெரிய துகள்கள் மூன்று முறை சர்வதேச விண்வெளி மையத்தின் அருகே வந்து சென்றதாக அமெரிக்கா கூறி உள்ளது.

மேலும் ரஷ்யா தனது சொந்த நாட்டு வீரர்களை பற்றி கூட கவலைப்படாமல் இந்த சோதனையை நடத்தி உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியில் இருந்து சுமார் 402 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Also Read: பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் வல்லமை இந்தியாவிற்கும் உண்டு என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம்: ராஜ்நாத்சிங்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், ரஷ்யா பொறுப்பற்ற முறையில் இந்த சோதனையை நடத்தி உள்ளது. விண்வெளி பாதுகாப்பை அனைத்து நாடுகளும் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். மொத்த உலகமுமே சாட்டிலைட் மூலமாக தான் இயங்கி கொண்டிருக்கிறது. வங்கி, தொலைதொடர்பு, இணைய சேவை, ஜிபிஎஸ், இராணுவம் என சாட்டிலைட்டின் தேவை இன்றியமையாதது.

Also Read: 5 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே.. பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை..

1959 ஆம் ஆண்டு முதன்முதலாக அமெரிக்கா சாட்டிலைட் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நடத்தியது. அதனை தொடர்ந்து ரஷ்யாவும் நடத்தியது. பின்பு சீனாவை அடுத்து நான்காவது நாடாக 2019 ஆம் ஆண்டு இந்தியாவும் சாட்டிலைட் எதிர்ப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்தியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள அமெரிக்கா..? அலறும் சீனா..

Leave a Reply

Your email address will not be published.