அரசியலுக்கு வர உள்ளதாக பரவிய தகவல்.. அரசியல் பயணம் குறித்து நடிகர் சோனு சூட் விளக்கம்..

நடிகர் சோனு சூட் விரைவில் ஒரு முக்கிய அரசியல் கட்சியில் இணைந்து அவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக வதந்தி பரவிய நிலையில் அதற்கு சோனு சூட் பதிலளித்து உள்ளார்.

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில், தான் எந்த அரசியல் கட்சியிலும் இணைய போவதில்லை என சோனு சூட் தெரிவித்துள்ளார். ஆனால் தனது சகோதரி மாளவிகா சூட் அரசியலில் ஈடுபட உள்ளார். அவருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இருப்பினும் மக்களுக்கு சேவை செய்ய சுதந்திரத்தை அனுமதிக்கு எந்த ஒரு தளத்திலும் சேர விருப்பம் தெரிவித்து உள்ளார். அது அரசியலாகவும் இருக்கலாம், அரசியல் அற்ற தளமாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார்.

அரசியலில் இணைவதற்கான விருப்பத்தை மறுத்த நடிகர் சோனுசூட்,
தனது குடும்பம் மக்களுக்கு கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் சேவை செய்ய ஆர்வம் செலுத்த உள்ளதாக சோனு சூட் தெரிவித்தார். மேலும் அவரது தங்கை மாளவிகா சூட் எந்த அரசியல் கட்சியில் இணைய உள்ளார் என்ற கேள்விக்கு, கட்சி முக்கியம் இல்லை, கொள்கையே முக்கியம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை பற்றிய கேள்விக்கு பதிலளித்த சோனு சூட், இது ஒரு சோதனை நேரம் என தெரிவித்தார். இந்த சோதனையால் மக்களுக்கு செய்யும் எனது சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது என அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த சோனுசூட், அவர்களுக்கு அவர்களது உரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களால் தான் நாம் சாப்பிடுகிறோம் என தெரிவித்தார். சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத்க்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஆனால் உங்கணை ஏன் விருதுக்கு பரிசீலிக்கவில்லை என கேட்டதற்கு, இது சிந்திக்க வேண்டிய கேள்வி என சோனுசூட் பதிலளித்தார்.

சோனுசூட் ஆம் ஆத்மி கட்சி அல்லது காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் விதமாக முன்பு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.