ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் கலவரம்.. பின்னணியில் சீனா.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

சில நாட்களுக்கு முன்பு சென்னை அருகே உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பெண் ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் சீனாவின் சதி திட்டம் காரணமாக இருக்கலாம் என புலனாய்வு அறிக்கையை சுட்டிக்காட்டி தி வீக் பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிமீபத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையரான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தரமற்ற கேண்டின் உணவினால் ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி அங்கு பணிபுரியும் பெண்கள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இந்த நிலையில் புலனாய்வு அறிக்கையை சுட்டிக்காட்டி தி வீக் செய்தி நிறுவனம், இந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தால் சீனா பாதிக்கப்பட்டது என்பது இரகசியமல்ல, ஏனெனில் ஆப்பிள் ஐபோனுக்கான உதிரி பாகங்கள் 48 சதவீதம் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டன.

அமெரிக்க மற்றும் சீனா இடையே மோதல் அதிகரித்து வந்ததால் ஆப்பிள் சாதனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என சீனா அச்சுறுத்தியது. இதனால் ஆப்பிள் நிறுவனம் அதன் உதிரி பாகங்களுக்கு இந்திய உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்தது. ஆப்பிள் மற்றும் பிற பன்னாட்டு தொழிற்நுட்ப நிறுவனங்களுக்கு உற்பத்திக்கு மாற்றாக இந்தியா உருவாகி வருவதால், அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக போரில் சீனாவின் விநியோக சங்கிலி சிங்கியிள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தைவானுக்கு சொந்தமானதகும். அதேபோல் தைவானுக்கு சொந்தமாக கர்நாடகாவின் நரசபுராவில் உள்ள விஸ்ட்ரான் இன்ஃபோகாம் உற்பத்தி நிறுவனம் மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள மஹிந்திரா சிட்டியில் உள்ள பெகாட்ரான் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் ஆகியவையும் அடங்கும். சமீபத்தில் விஸ்ட்ரான் நிறுவனம் தொழிற்சாலைக்குள் தாக்குதல் மற்றும் வன்முறை காரணமாக உற்பத்தியை நிறுத்தியது.

இதேபோல் சான்மினா, ஃபோர்டு, பிபிஜி ஏசியன் பெயிண்ட்ஸ், என்ஃபீல்ட் இந்தியா லிமிடெட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும் இதே போன்ற அமைதியின்மை நிலவுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வேறு சில நிறுவனங்களிலும் இந்த குழு ஊடுருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் ஜனநாயக வாலிபர் சங்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் மாணவர்கள் எழுச்சி இயக்கம் தலைமையின் கீழ் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்தும், இந்தியாவுக்கு வெளியே இவர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன.

Also Read: அதிக எண்ணிக்கையிலான யூனிகார்ன்களுடன் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!

தொழிலாளர்களுக்கு சீன உதவி பற்றி கேட்டபோது, திமுக ராஜ்யசபா உறுப்பினரும், கட்சியின் தொழிலாளர் பிரிவு, தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பின் (LPF) பொதுச் செயலாளருமான எம்.சண்முகம் மற்றும் CPI(M)ன் மாநில செயலாளர் கே.கனகராஜ் கூறும்போது, ஃபாக்ஸ்கான் வளாகத்தில் சீனாவின் கைவரிசை இருப்பதை மறுத்தனர்.

Also Read: பொருளாதாரத்தில் ஐரோப்பிய நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும்: CEBR கணிப்பு

ஃபாக்ஸ்கான் நிறுவனம் இதற்கு முன்பு நோக்கியா நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரித்து வந்தது. சென்னை ஃபாக்ஸ்கான் பிரிவில் ஆண்கள், பெண்கள் என சுமார் 14,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதற்கு முன்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும் அங்கு நடந்த கலவரத்தால் இழுத்து மூடப்பட்டது. நாட்டின் மொத்த தாமிர தேவையில் 40 சதவீதத்தை இந்த தூத்துகுடி ஸ்டெர்லைட் நிறுவனம்தான் பூர்த்தி செய்தது.

Also Read: 2021 டிசம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை.. அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்..

பின்னர் ஆலை மூடப்பட்டதால் சீனாவிடம் இருந்து தாமிரம் இறக்குமதி செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை திறந்து இருந்த 2018 நிதியாண்டு வரை சுமார் 3 லட்சம் டன்னிற்கும் அதிகமாக தாமிரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது 2 லட்சம் டன்னுக்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 2021 நிதியாண்டு சுமார் 3 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இழப்பு மற்றும் 2022 ஆம் ஆண்டு 4 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவில் அமைகிறது TSMC நிறுவனத்தின் சிப் உற்பத்தி ஆலை..? தைவானுடன் பேச்சுவார்த்தை..

Leave a Reply

Your email address will not be published.