OTT, கிரிப்டோ கரன்சி மற்றும் மொபைல் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்: RSS தலைவர் மோகன் பகவத்

OTT மற்றும் மொபைலில் காண்பிக்கப்படும் உள்ளடக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா காலம் என்பதால் எல்லா குழந்தைகளிடமும் மொபைல் உள்ளது. அதில் காண்பிக்கப்படும் உள்ளடக்கத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவின் நாக்பூரில் விஜயதசமி விழா நடைபெற்றது. இதில் RSS தலைவர் மோகன் பகவத் மற்றும் இஸ்ரேல் தூதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோகன் பகவத் இந்தியாவில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை அரசு தடுக்க வேண்டும். மேலும் பாகிஸ்தானையும் மோகன் பகவத் சாடினார்.

இதுபோன்ற போதைப்பொருள் பயன்பாட்டை சில அண்டை நாடுகள் ஊக்குவிப்பதாகவும், அதிலிருந்து கிடைக்கும் பணத்தை பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்துவதாகவும் பாகிஸ்தானை விமர்சித்தார். மேலும் கிரிப்டோ கரன்சி போன்ற ரகசியமான கட்டுப்பாடுகள் இல்லாத நாணயங்களால் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சீர்குலையும் என பகவத் தெரிவித்துள்ளார்.

Also Read: மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும்.. பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை..

மேலும் கிரிப்டோ கரன்சியால் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் செயல்படுத்தும் வரை சமூகம் காத்திருக்க கூடாது எனவும் பகவத் கூறினார். ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளதையும் மோகன் பகவத் கூறினார்.

Also Read: தரமான உள்கட்டமைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை: பிரதமர் மோடி..

இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தை RSS அமைப்பின் பத்திரிக்கையில் விமர்சிக்கப்பட்டு இருந்தது. அமேசான் நிறுவனம் “கிழக்கிந்திய கம்பெனி 2.0” என விமர்சிக்கப்பட்டிருந்தது. கிழக்கிந்திய கம்பெனி என்ன செய்ததோ அதையேதான் அமேசானும் செய்கிறது என கூறப்பட்டு இருந்தது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யாமல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து அமேசான் விற்பனை செய்வதாக பத்திரிக்கையில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

Also Read: இந்திய விண்வெளி சங்கத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. விண்வெளித்துறையில் புதிய மைல்கல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *