முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்.. ஸ்வீடனுக்கு சீனா எச்சரிக்கை..

தீவிர வலதுசாரி அரசியல்வாதி குத்ஆனை எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஸ்வீடனை சீனா எச்சரித்துள்ளது. மேலும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என ஸ்வீடனை சீனா வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் தீவிர வலதுசாரியான ஸ்ட்ராம் குர்ஸ் குழுவின் தலைவரான ராஸ்மஸ் பலுடன், ஸ்வீடனின் லிங்கோப்பிங் நகரில் இஸ்லாமியர்களின் புனித நூலின் பிரதியை எரித்தார். மேலும் எதிர்கால பேரணிகளில் குர்ஆன் பிரதிகளை எரிக்கப்போவதாகவும் எச்சரித்து இருந்தார்.

இதற்கு துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பல இஸ்லாமிய நாடுகள் குரான் எரிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இது இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல் என குற்றம் சாட்டின. மேலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு குரான் எரிப்புக்கு கண்டனம் தெரிவித்தது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் ஹிஸைன் ப்ராஹிம் தாஹா, லிங்கோப்பிங், நோர்கோபிங் உட்பட ஸ்வீடனின் பல நகரங்களில் நடைபெற்ற முஸ்லிம் எதிர்ப்பு ஆர்பாட்டங்களின் போது குரான் எரிக்கப்பட்ட சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. பேச்சு சுதந்திரம் இன அல்லது கலாச்சார பாகுபாட்டை தூண்டுவதற்கும் சமூகத்தை துண்டாடுவதற்கும் குரான் ஒரு காரணமாக இருக்க முடியாது என சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.

Also Read: பிரதமர் மோடி ஜம்மு செல்ல உள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. CISF வீரர் உயிரிழப்பு..

முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகத்தின் மத நம்பிக்கைகளை ஸ்வீடன் முழுமையாக மதிக்க வேண்டும் என வாங் கூறியுள்ளார். இருப்பினும் சீனாவின் இந்த கருத்துக்கு வரவேற்பு தெரிவிக்கும் அதேநேரத்தில் சீனா உய்கூர் முஸ்லிம்களை நடத்தம் விதம் குறித்தும் கண்டனம் எழுந்துள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனா உய்கூர் முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளது.

அங்கு அவர்களை சித்திரவதை, கற்பழிப்பு, கட்டாய கருகலைப்பு, கட்டாய உழைப்பு மற்றும் இனப்படுகொலை செய்து வருகிறது. சீனாவின் இந்த செயலுக்கு உலக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதாக குற்றம் சாட்டி வருகின்றன.

Also Read: சீனா, சாலமன் தீவு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து.. அமெரிக்கா எச்சரிக்கை..

ஆனால் பாகிஸ்தான் இனப்படுகொலை செய்யவில்லை என சீனாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறது. இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்யும் சீனா ஸ்வீடனுக்கு கண்டனம் தெரிவித்து இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.