ISIS அமைப்புக்கு ஆட்சேர்ப்பு.. கர்நாடகாவை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த NIA..?

ISIS பயங்கரவாத குழுவுக்கு முஸ்லிம் இளைஞர்களை ஆட்சேர்த்ததாக கூறப்படும் மூன்று நபர்களுக்கு எதிராக NIA சனிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இவர்கள் சிரியாவிற்கு ஆட்களை சேர்த்து அதன் மூலம் நிதி திரட்டியதாக தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் செயல்படும் ISIS பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்ததாக கர்நாடகா மாநிலம் பெங்களுரை சேர்ந்த முஹம்மது தௌகிர் மஹ்மூத் மற்றும் ஜோயிப் மன்னா மற்றும் பட்கலை சேர்ந்த முகமது ஷிஹாப் ஆகியோரை NIA கைது செய்து, அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் (UAPA) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ISIS அமைப்பை விரிவுபடுத்த இஸ்லாமிய அரசு கொராசன் மாகாண வழக்கில் டாக்டர் அப்துர் ரஹ்மான் விசாரணை தொடர்பான வழக்கில் செப்டம்பர் 2020ல் NIA வழக்கு பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது கர்நாடகாவில் இருந்து சிரியா போன்ற ISIS பகுதிகளுக்கு முஸ்லிம் இளைஞர்களின் வருகையை தீவிரப்படுத்தவும், நிதியுதவி செய்யவும் காரணமான பல்வேறு நபர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளதாக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Also Read: ரஷ்யா உடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து..?உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு..

மஹ்மூத் மற்றும் மன்னா ஆகியோர் குரான் சர்க்கிள் குழுவின் மூலம் முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு செய்துள்ளனர். ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்த மஹ்மூத் மற்றும் ஷிஹாப் இதற்கு முன்பு சட்டவிரோதமாக சிரியாவுக்கு சென்றுவந்துள்ளதாக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Also Read: ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. எச்சரித்த தாலிபான்..

சிரியாவிற்கு இளைஞர்களை ஆட்சேர்ப்பது மற்றும் நிதி திரட்டுவது போன்ற மற்ற அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக NIA தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.