S-500 அமைப்பை வாங்க தயார்..? ஆனால் இந்தியாவுக்கு விற்க கூடாது.. ரஷ்யாவுக்கு நிபந்தனை விதித்த சீனா..

ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவுக்கு S-500 வான் பாதுகாப்பு அமைப்பை விற்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், சீனா S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கு நிபந்தனை ஒன்றையும் சீனா விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதாவது சீனா S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கினால் அதனை இந்தியாவுக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகே விற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் இந்திய தரப்பில் S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளிவரவில்லை.

மேலும் S-400 ஏவுகணை அமைப்பு இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் துவக்கத்தில் இந்தியா வரும் என கூறப்பட்டுள்ளது. சீனாவிடமும் S-400 ஏவுகணை அமைப்பு 2018 ஆம் ஆண்டு முதல் உள்ளது. இந்த நிலையில் ஏன் சீனா அவசர அவசரமாக S-500 ஏவுகணை அமைப்பை வாங்க உள்ளது என்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக இந்த வருடம் இந்தியாவுக்கு S-400 வர உள்ளதால் சீனாவிடம் உள்ள S-400 அமைப்பால் எந்த பயனும் இல்லை. அதனால் மேம்பட்ட தொழிற்நுட்பமான S-500 ஏவுகணை அமைப்பை வாங்க உள்ளது. அடுத்ததாக தைவான் மற்றும் இந்தியா என இரண்டு பக்கமும் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு வேளை தைவானை தாக்கினால் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக போருக்கு வரும். இதனால் மிகப்பெரிய இழப்பு சீனாவுக்கு ஏற்படும். சீனாவிடம் ஹைப்பர்சோனிக் தொழிற்நுட்பம் உள்ளது. அதேவேளையில் அமெரிக்காவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரித்துவிட்டது. ஆனால் அவை சோதனையில் தோல்வியை தழுவின.

ஆனால் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி பெறலாம் என சீனா அஞ்சுகிறது. இதனால் தான் S-500 ஏவுகணை அமைப்பை வாங்க ஆர்வமாக உள்ளது. மற்றொரு காரணம் ரஷ்யாவின் சொந்த தயாரிப்பான S-500 ஏவுகணை அமைப்பை வாங்கி அதனை அலசி ஆராய்ந்து அதே போன்ற மாதிரி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

S-300 ஏவுகணை அமைப்பை ரஷ்யா பிரிவதற்கு முன் சோவியத் யூனியனாக இருந்த போது சோவியத் யூனியனில் உள்ள பல நாடுகளால் உருவாக்கப்பட்டது. அதில் சிறிது மாற்றம் செய்து S-400 அமைப்பை உருவாக்கியது. தற்போது S-500 வான் பாதுகாப்பு அமைப்பு முழுக்க ரஷ்யாவின் தயாரிப்பாகும். அதனால் இதனை வாங்க சீனா ஆர்வமாக உள்ளது.

Also Read: எதிரிகளின் விமானதளங்களை தாக்கி அளிக்கும் SAAW ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

அடுத்த காரணம் S-500 வான் பாதுகாப்பு அமைப்பு சாட்டிலைட்டை தாக்கி அழிக்க கூடியது. இதனை ரஷ்யா வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ரஷ்யா சோதனை செய்த போது அமெரிக்க அதனை கண்டுபிடித்துவிட்டது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி துறை தலைவர் கூறுகையில், ரஷ்யா சாட்டிலைட்டை அழிக்கும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக கூறினார்.

அதற்கு ரஷ்யா கூறுகையில், நாங்கள் சாட்டிலைட்டை அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்யவில்லை, மாறாக S-500 வான் பாதுகாப்பு அமைப்பை தான் சோதனை செய்தோம் என ரஷ்யா கூறியது. அதன் பிறகே S-500 வான் பாதுகாப்பு அமைப்பால் சாட்டிலைட்டை தாக்கி அழிக்க முடியும் என தெரியவந்துள்ளது.

Also Read: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘துஷீல்’ போர்கப்பல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது சீனா S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க முன்வந்துள்ள நிலையில், அதனை வாங்குவது தொடர்பாக இந்தியா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சீனாவிற்கு முதலில் வழங்கினால் நீண்ட கால நண்பனான இந்தியா அதிருப்தி தெரிவிக்கும் என ரஷ்யா நினைக்கிறது. அதே நேரத்தில் ரஷ்யா சீனாவின் நீண்ட கால நண்பன் இல்லை, ஆனால் பொருளாதார ரீதியில் மற்றும் அதிக அளவில் இராணுவ தடவாளங்களை விற்பனை செய்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கு முதலில் யாருக்கு வழங்குவது என்ற குழப்பத்தில் ரஷ்யா உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது: அமெரிக்கா அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *