லக்னோவில் 600 படுக்கைகள் கொண்ட 2 மருத்துவமனைகளை அமைக்க ராஜ்நாத்சிங் உத்தரவு..

உத்திரபிரதேசத்தின் லக்னோவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் லக்னோவில் உள்ள DRDOவின் இரண்டு மருத்துவமனைகள் அடுத்த வாரம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

லக்னோவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலையீட்டின் படி இந்த இரண்டு மருத்துவமனைகளும் செயல்பாட்டுக்கு வரஉள்ளன. லக்னோவில் மட்டும் கோரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000 கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,000 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 36 பேர் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த மருத்துவமனையிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான ஆலையும் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம் ஆக்சிஜனுக்காக காத்திருக்காமல் மருத்துவமனை வளாகத்திலேயே உற்பத்தி செய்ய முடியும்.

இது தேஜாஸ் போர் விமானத்தை அடிப்படையாக கொண்டு ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட உள்ளது. தேஜஸ் விமானத்தில் விமானிக்கு தேவையான ஆக்சிஜனை விமானமே உற்பத்தி செய்து கொள்ளும், அதன் அடிப்படையில் இந்த ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட உள்ளன.

ராஜ்நாத்சிங் டி.ஆர்.டி.ஓவிடம் 600 படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகளை உருவாக்க கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த வாரத்தில் இந்த 2 மருத்துவமனைகளை அமைச்சர் ராஜ்நாத்சிங் துவக்கி வைக்க உள்ளார்.

மேலும் கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க உபி அரசு 225 கோடி அடங்கிய நிவாரண தொகுப்பை அறிவித்துள்ளது. இதில் கொரோனா கிட்கள், மருந்துகள், சோதனை கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு 5 கோடியும், குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு 2 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என உ.பி. அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *