பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை.. பஞ்சாபில் பரபரப்பு..

பஞ்சாபி பாடகரும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ் வாலா, பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் மர்ம நபர்களால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். பஞ்சாப் அரசால் அவரது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தகவலின்படி, காயமடைந்த சித்து மற்றும் மேலும் இரண்டு நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மான்சா மருத்துவமனையில் சிவில் சர்ஜியன் டாக்டர் ரஞ்சீத் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களில் காங்கிரஸ் தலைவர் சித்து உயிரிழந்துவிட்டார்.

மற்ற இருவரும் மேல்சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவர் கூறினார். மான்சா அருகே சித்து கார் மீது மர்ம நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், அவர் குறைந்தது 10 முறை சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சித்து மான்சா அருகே உள்ள மூஸ் வாலா கிராமத்தை சேர்ந்தவர்.

பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், திறமையான இசைக்கலைஞருமான சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம் என காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்துள்ளது.

Also Read: NIA அதிகாரியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு..

பாடகரான சித்து கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மான்சா தொகுதியில் போட்டியிட்டார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் 63,323 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

Also Read: சட்டம் ஒழுங்கு சீர்கேடு: பஞ்சாபிற்கு துணை ராணுவத்தை அனுப்ப DGP கோரிக்கை..

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான தலைமையிலான அரசு பஞ்சாப் மாநிலத்தில் 424 பேருக்கு வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பை நேற்று விலக்கி கொண்டது. சித்து உட்பட பல ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர் உட்பட 424 பேரின் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில் சித்து இன்று மர்ம நபர்களால் சுட்டுகொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் டிஜிபி, பஞ்சாவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, அதனால் துணை இராணுவத்தை பஞ்சாபிற்கு அனுப்புமாறு உள்துறைக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிறுபான்மையினருக்கு கல்வி கட்டணத்தை திருப்பி செலுத்த பள்ளிகளுக்கு டெல்லி அரசு உத்தரவு..?

Leave a Reply

Your email address will not be published.