புல்வாமா தாக்குதலுடன் தொடர்புடையவர் பாகிஸ்தான் இராணுவ தளபதியாக நியமிப்பு..?

பாகிஸ்தானின் தற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா ஓய்வு பெற உள்ள நிலையில் பாகிஸ்தானின் புதிய இராணுவ தளபதியாக ஜெனரல் அசிம் முனிரை நியமித்து அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு லெப்டினன்ட் ஜெனரல் முனீரின் மேற்பார்வையில் தான் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. முனீர் அப்போது ISI யின் டிஜியாக இருந்தார். இந்தியாவின் காஷ்மீரை கண்காணிக்கும் பகுதியில் முனீர் பணியாற்றியுள்ளார். காஷ்மீர் தொடர்பான பகுதி அல்லது பிரச்சனையில் முனீர் அனுபவம் வாய்ந்தவர் என கூறப்படுகிறது.

தற்போது பாகிஸ்தானின் இராணுவ தளபதியாக உள்ள ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா நவம்பர் 29 அன்று ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய இராணுவ தளபதியாக அசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். அசிம் முனீர் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படுகிறது.

இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பின்னணியில் இராணுவம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டில் அசிம் முனீரும் இருப்பதாக கூறப்படுகிறது. முனீர் பாகிஸ்தானின் 17 வது இராணுவ தளபதி ஆவார். முனீர் மற்றும் ஷ்ம்ஷாத் ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி ஆரிப் அல்வியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஜனாதிபதி இன்று முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய இராணுவ தளபதிக்கான ஆணையில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பஜ்வா ஓய்வு பெற்ற உடன் முனீர் புதிய இராணுவ தளபதியாக பதவி ஏற்பார். பாகிஸ்தானின் சிக்கலான அரசியல், உள் மற்றும் வெளிநாட்டு சவால்கள், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு மத்தியில் முனீர் பதவி ஏற்க உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.