குவைத்தில் இந்தியாவிற்கு எதிராக போராட்டம்.. அனைவரையும் நாடு கடத்த குவைத் அரசு உத்தரவு..

வெள்ளிக்கிழமை குவைத்தின் ஃபஹாஹீலில் இந்தியாவிற்கு எதிராக நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டினரையும் நாடு கடத்துவதற்கு குவைத் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

முகமது நபி மற்றும் அவரது மனைவி ஆயிஷா குறித்து முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர்கள் கூறிய கருத்து சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குவைத்தின் ஃபஹாஹீலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு தர்ணா போராட்டம் நடத்திய இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினரையும் நாடு கடத்த குவைத் அரசு உத்தரவிட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைத்தில் வெளிநாட்டினர் போராட்டங்கள் அல்லது ஆர்பாட்டங்கள் நடத்த கூடாது என சட்டம் உள்ளது. இந்த நிலையில் சட்ட விதிமுறைகளை மீறி வெளிநாட்டினர் போராட்டம் நடத்தியதால் அவர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் போது சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவை வைத்து புலனாய்வு அமைப்பினர் அவர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை கைது செய்து அவர்களின் நாடு கடத்தும் மையத்தை குறிப்பிடும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நாடு கடத்தப்படும் அனைவரும் நிரந்தரமாக குவைத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களும் குவைத் சட்டங்களை மதிக்க வேண்டும் மற்றும் எந்த வகையான ஆர்பாட்டங்களிலும் பங்கேற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தானுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான வாகெடுப்பில் இருந்து வெளியேறிய இந்தியா..?

முன்னதாக பாஜக தலைவர்களின் கருத்துக்கு குவைத் அரசு, குவைத்திற்கான இந்திய தூதரை நேரில் வரவழைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் நாட்டை சட்டத்தை மீறும் நிலைக்கு கொண்டு செல்ல கூடாது என்பதே அரசாங்கத்தின் கருத்து என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: முகமது நபி சர்ச்சை: நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த நெதர்லாந்து பாராளுமன்ற தலைவர்..

இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதி தடை பட்டியலில் இருந்து குவைத்தை நீக்ககோரி, குவைத் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஃபஹத் அல்-ஷரியான், குவைத்துக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜை விரைவில் சந்திக்க உள்ளார்.

Also Read: போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனை சரணடைய கூறும் அமெரிக்கா..?

Leave a Reply

Your email address will not be published.