உலகிலேயே அதிக உயரத்தில் பறக்கக்கூடிய LCH ஹெலிகாப்டரை நாளை நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி..

நாட்டின் 75வது சுதந்திரத்தினத்தை குறிக்கும் வகையில் உத்திரபிரதேசத்தின் ஜான்சியில் சுதந்திர தின விழா நேற்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் இறுதி நாளான நாளை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் நிறுவனம் (HAL) தயாரித்த இலகுரக போர் ஹெலிகாப்டரை (LCH) இந்திய விமானப்படைக்கு அதிகாரபூர்வமாக வழங்குகிறார்.

இதனை இந்திய விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதாரி பெற்றுகொள்கிறார். இது தவிர ஆளில்லா விமானம்( UAV) மற்றும் போர்கப்பல்களுக்கான மிண்ணனு போர் அமைப்பு ஆகியவற்றையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதனை இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனேவிடம் பிரதமர் மோடி ஒப்படைப்பார் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய LCH ஹெலிகாப்டர் சீனாவிற்கு எதிராக லடாக்கில் நிறுத்தப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டர் 5000 மீட்டர் உயரத்தில் வரை பறக்க கூடியது என கூறப்பட்டுள்ளது. அதாவது கடல் மட்டத்தில் இருந்து லடாக்கில் உள்ள 5000 மீட்டர் உயரத்தில் தரையிறங்கக்கூடிய மற்றும் புறப்படக்கூடிய ஒரே தாக்குதல் விமானம் ஆகும். 5,000 மீட்டர் உயரத்தில் இருந்து புறப்பட்டு 6,600 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது.

அதாவது 5,000 மீட்டரில் இருந்து புறப்பட்டு கூடுதலாக 1,600 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது. 6,600 மீட்டர் வரை பறக்கும் உலகின் ஒரே இலகுரக தாக்குதல் விமானம் இதுதான். அதே நேரத்தில் இந்திய விமானப்படையில் அமெரிக்காவின் AH-64D அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரும் உள்ளது. இருப்பினும் மலை பகுதிகளில் LCA ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள அமெரிக்கா..? அலறும் சீனா..

ஏனெனில் அப்பாச்சி ஹெலிகாப்டர் என்பது மேம்படுத்தப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர் (AAH). ஆனால் HAL தயாரித்தது இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் (LCH). அப்பாச்சி ஹெலிகாப்டர் அதிகபட்சமாக 6,100 மீட்டர் உயரம் வரை தான் செல்ல முடியும். ஆனால் இந்தியாவின் LCH ஹெலிகாப்டர் 6,600 மீட்டர் உயரம் வரை ஆயுதங்கைளுடன் பறக்க கூடியது.

Also Read: இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட INS வேலா நீர்மூழ்கிக்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

இதனால் தான் இந்தியாவின் LCH ஹெலிகாப்டர் உலகிலேயே அதிக உயரம் பறக்கக்கூடியது. இதுபோன்ற ஒரு ஹெலிகாப்டர் சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இல்லை என்பதால் மலை பகுதிகளில் இந்தியாவின் கை ஓங்கி இருக்கும் என கூறப்படுகிறது. நாளை நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதனை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

Also Read: S-500 அமைப்பை வாங்க தயார்..? ஆனால் இந்தியாவுக்கு விற்க கூடாது.. ரஷ்யாவுக்கு நிபந்தனை விதித்த சீனா..

Leave a Reply

Your email address will not be published.