அடுத்த ஆண்டு தனது முதல் வெளிநாட்டு பயணமாக UAE செல்கிறார் பிரதமர் மோடி..?

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு செல்கிறார். இருதரப்பிலும் தேதி இன்னும் உறுகி செய்யப்படவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பயணம் மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸூம் அடுத்த ஆண்டு இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டை கொண்டாட உள்ள நிலையில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி துபாய் எக்ஸ்போவையும் பார்வையிடுகிறார்.

இந்தியாவும் ஐக்கிய எமிரேட்ஸூம் பொருளாதார உறவுகளை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரி விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிபடுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரதமரின் இந்த பயணத்தின் போது ஒப்பந்தத்திற்கான முடிவுகள் எட்டப்பட வாய்ப்பு உள்ளது.

வளர்ந்து வரும் மூலோபாய உறவுகளின் அடிப்படையில் இந்தியாவும் ஐக்கிய எமிரேட்ஸூம் நான்கு நாடுகள் கொண்ட குழுவில் இணைந்துள்ளன. மற்ற இரண்டு நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். இவை வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மார்ச் மாதம் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு ஐக்கிய எமிரேட்ஸூக்கு விஜயம் செய்த போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மீண்டும் எழுச்சியை கண்டது. அதேபோல் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆயுத படைகளின் துணை தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2016 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தார்.

பின்பு மீண்டும் 2017 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு துபாயில் நடந்த 6வது உலக அரசாங்க உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்கிற்கு சென்றார். அதில் இந்தியா கௌரவ விருந்தினராக மோடி கலந்து கொண்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆப் சயீத்’ அறிவிக்கப்பட்டது. அதற்காக 2019 ஆகஸ்டு மாதம் மீண்டும் பயணம் மேற்கொண்டார்.

Also Read: சீனாவின் ஜின்ஜியாங்கில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை.. கையெழுத்திட்டார் ஜோ பிடன்..

ஐக்கிய அமீரகத்தில் 3.3 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் ஐக்கிய அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் இராஜகந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷ் இந்தியாவிற்கு வருகை தந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு பயணம் மேற்கொண்டார்.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ஆதரவு..?

வளைகுடா நாட்டிற்கு இராணுவ தளபதி ஒருவர் பயணம் மேற்கொள்வது இது முதல் முறையாகும். அதன்பின் ஜூலை மாதம் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்சல் ஆர்.கே.எஸ்.பதௌரியா பயணம் மேற்கொண்டார். ஆப்கானிஸ்தான் உட்பட அரபு நாடுகளில் சீனா தனது இருப்பை அதிகபடுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி அடுத்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கொரோனா பரவலை பொறுத்து தேதிகள் இறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: அர்ஜென்டினா உடனான JF-17 ஒப்பந்தத்தை இழக்க நேரிடும். இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் தூதரகம் ட்வீட்..

Leave a Reply

Your email address will not be published.