பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையே ஆப்கன் குறித்து பேச்சுவார்த்தை.. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்பட நடவடிக்கை..
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இடையே இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலில் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ஆப்கன் பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதை பொருள் கடத்தல், பயங்கரவாதம், மனித கடத்தல், சட்ட விரோத ஆயுத கடத்தல் போன்றவை பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியா பிரான்ஸ் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது தூதரை பிரான்ஸ் திருப்பி அழைத்து கௌண்டது.
பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பிரான்ஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தென்சீனக்கடல் பகுதியில் சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா 8 அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை தயாரித்து ஆஸ்திரேலியாவுக்கு வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாலையே தனது தூதரை பிரான்ஸ் திரும்ப அழைத்து கொண்டது.
Also Read: குஜராத் அருகே பிடிபட்ட 3,000 கிலோ போதைப்பொருள்..? தாலிபான்களுக்கு தொடர்பு..
இருப்பினும் பிரான்ஸ் உடன் போட்ட ஒப்பந்த டீசலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள். ஆனால் அமெரிக்காவுடன் போட்டுள்ள ஒப்பந்த அணுசக்தியில் இயங்க கூடியது. அணு சக்தியால் இயங்க கூடிய நீர்மூழ்கி கப்பல் மூலம் வருட கணக்கில் கடலுக்குள் இருந்தே செயல்பட முடியும். இதன் மூலம் சீனாவை கண்காணிப்பது எளிதாகிறது.
ஆஸ்திரேலியா ரத்து செய்த ஆர்டரின் மதிப்பு 40 பில்லியன் டாலர் மதிப்பு ஆகும். இதனிடையே அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே புதிய பாதுகாப்பு கூட்டணி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு இருதரப்பு உறவு குறித்து பேசியுள்ளார்.
Also Read: சீனாவை விட்டு வெளியேறும் பெரும் நிறுவனங்கள்.. இந்தியாவில் கால்பதிக்கும் ஆப்பிள்..