இமாச்சல் பிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி.. 11,000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்..

பிரதமர் நரேந்திர மோடி இன்று 11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும், அடிக்கல் நாட்டவும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டிக்கு வருகை தருகிறார். மேலும் ஹிமாச்சல் பிரதேசத்தின் இரண்டாவது உலக முதலீட்டார்கள் மாநாட்டையும் துவக்கி வைக்கிறார்.

சுமார் 28,000 மதப்பிலான திட்டங்களை தொடங்குவதன் மூலம் ஹிமாச்சல் பிரதேசத்தில் முதலீட்டுக்கு ஊக்கமளிக்கும் என கூறப்படுகிறது. மேலும் 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ரேணுகாஜி அணை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 7,000 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த அணையின் மூலம் தலைநகர் டெல்லி வரை நீர் விநியோகம் கிடைக்கும்.

ஆண்டுக்கு 500 மில்லியன் கன மீட்டர் நீர் விநியோகம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முடிக்க இமாச்சல் பிரதேசம், உத்திரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் டெல்லி ஆகிய ஆறு மாநிலங்களின் முயற்சியால் சாத்தியமாகியுள்ளது.

லுஹ்ரி ஸ்டேஜ் 1 ஹைட்ரோ பவர் ப்ராஜக்ட் 210 மெகாவாட் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 1,800 கோடியில் கட்டப்படும் இந்த நீர் மின் நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 750 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் சுற்றியுள்ள மாநிலங்களுக்கும் மின் விநியோகம் கிடைக்கும்.

மேலும் ஹமிர்பூர் மாவட்டத்தின் முதல் நீர்மின் திட்டமான 66 மெகாவாட் தௌலாசித் நீர் மின் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த தௌலாசித் நீர் மின்திட்டம் 680 கோடி செலவில் கட்டமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படும்.

Also Read: அதிக எண்ணிக்கையிலான யூனிகார்ன்களுடன் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!

2,080 கோடி செலவில் கட்டப்பட்ட 111 மெகாவாட் திறன்கொண்ட சவ்ரா-குட்டு நீர் மின் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நீர்மின் நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 380 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மேலும் இதன் மூலம் அம்மாநிலம் 120 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: முதன்முறையாக கிராமத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 5G தொழிற்நுட்பம்.. 360 டிகிரி விர்ச்சுவல் ரியாலிட்டியும் சோதனை..

மேலும் இமாச்சல் பிரதேசத்தின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் இப்பகுதியில் முதலீடு ஈர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நீர்மின் திட்டங்கள் மூலம் மாநிலத்தில் வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் அதிகரிக்கும். உலக முதலீட்டார்கள் மாநாட்டில் மூலம் முதலீடு ஈர்க்கப்பட்டு அது அம்மாநிலம் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள மாநிலமும் பலனடையும்.

Also Read: திருமண வயதை உயர்த்தும் முடிவு பெண்களுக்கு மகிழ்ச்சியும், சிலருக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி

Leave a Reply

Your email address will not be published.