உ.பியில் 594 கி.மீ நீளமுள்ள கங்கா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. போர் விமானங்கள் தரையிறங்கவும் ஏற்பாடு..

பிரதமர் மோடி இன்று உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் 594 கிலோ மீட்டர் நீளமுள்ள கங்கா விரைவு சாலைக்கு அடிக்கல் நாட்டினார். அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை கொண்ட அதி நவீன மாநிலமாக உத்திர பிரதேசம் இருக்கும் என மோடி தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டுவிழா கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாயிகள், இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் கங்கா விரைவுச்சாலை முடிவற்ற வாய்ப்புகளை லழங்கும் என தெரிவித்துள்ளார். சுமார் 600 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த விரைவுச்சாலைக்கு 36,000 கோடிக்கு மேல் செலவிடப்படும் என கூறினார். இந்த கங்கா விரைவுச்சாலை மூலம் இந்த பிராந்தியத்தில் வேலை வாய்ப்பு பெருகும் என மோடி தெரிவித்துள்ளார்.

இந்த விரைவுச்சாலை உத்திரபிரதேசத்திற்கான கதவுகளை திறக்கும். எண்ணற்ற வேலை வாய்ப்புகளையும், ஆயிரகணக்கான இளைஞர்களுக்கு பல புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும் என மோடி கூறினார். அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக உத்திர பிரதேசம் இருக்கும் எனவும், உத்திர பிரதேசத்தில் உள்ள விரைவுச்சாலைகளின் நெட்வொர்க், கட்டப்பட்டு வரும் புதிய விமானநிலையங்கள், ரயில் வழித்தடங்கள் ஆகியவை ஒரே நேரத்தில் உத்திரபிரதேச மக்களுக்கு பல ஆசிர்வாதங்களை கொண்டு வருவதாக மோடி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பணம் முன்பு எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இப்போது உத்திர பிரதேசத்தின் பணம் உத்திர பிரதேச மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது என மோடி கூறினார். எதிர்கட்சிகளை சாடிய பிரதமர், முன்பு ஒருசிலர் மட்டுமே பயனடைந்தனர். தற்போது அனைவருக்கும் நன்மை பெற உள்ளது. இப்போது அரசின் கவனம், சப்கா சத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ் என மோடி தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சி(விகாஸ்) மற்றும் பாரம்பரியம்(விராசத்) ஆகியவற்றில் சில அரசியல் கட்சிகளுக்கு சிக்கல் உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். யோகியை பாராட்டிய மோடி, ‘உபி மற்றும் யோகி போஹைட் ஹை உப்யோகி’ என்ற முழக்கத்தை எழுப்பினார். அதாவது உபியில் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என கூறினார்.

Also Read: பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்த ஏன் வெட்கப்படுகிறீர்கள்.. கேரள உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..

அடிக்கல் நாட்டப்பட்ட இந்த கங்கா விரைவுச்சாலை 594 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறுவழிச்சாலை ஆகும். 36,230 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு செலவிடப்பட உள்ளது. உத்திர பிரதேசத்தின் மிக நீளமான சாலை என கூறப்படுகிறது. மீரட்டின் பிஜௌலி என்ற இடத்தில் தொடங்கி ஹப்பூர், புலந்த்ஷாஹர், சம்பல், படான், அம்ரோஹா, ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் வழியாக சென்று பிரயாக்ராஜின் ஜூடாபூர் என்ற இடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read: மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக இந்தியாவில் 530 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ள ஹூண்டாய் நிறுவனம்..

இந்த கங்கா விரைவுச்சாலையில் 7 ரயில்வே மேம்பாலங்கள், 14 பெரிய பாலங்கள், 126 சிறிய பாலங்கள், 375 சுரங்கப்பாதைகள், 9 பொது வசதி வளாகங்கள், 17 இடங்களில் மாற்று வசதிகள், 2 சுங்கச்சாவடிகள் மற்றும் 15 சாய்வு சுங்கச்சாவடிகள் கட்டப்பட உள்ளன. மேலும் ஷாஜஹான்பூரில் போர்விமானங்கள் தரையிறங்கும் வகையில் 3.5 கிலோமீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளமும் கட்டப்பட உள்ளன.

Also Read: இந்தியாவில் 76,000 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே உற்பத்தி PLI திட்டத்திற்கு ஒப்புதல்..

இந்த விரைவுச்சாலை முழுவதும் சுமார் 18,55,000 மரக்கன்றுகள் நடப்படும். குறைந்த வளர்ச்சி அடைந்த பகுதிகளான ரோஹில்கண்ட் மற்றும் விந்தியா பகுதிகளில் விவசாயம், சுற்றுலா, வணிகம் மற்றும் தொழில்கள் ஊக்கம் பெறும் என கூறப்படுகிறது. உணவு பதப்படுத்தும் கிடங்குகள், விவசாய சந்தைகள் மற்றும் பால் சார்ந்த தௌழில்களின் வளர்ச்சிக்கு இந்த சாலை முக்கிய பங்கு வகிக்கும். இந்த சாலை உற்பத்தி அலகுகள், வளர்ச்சி மையங்கள் மற்றும் விவசாய உற்பத்தி மையங்களை தேசிய தலைநகருடன் இணைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.