பூர்வாஞ்சல் ஆறுவழிச்சாலையை நாட்டு அர்பணித்தார் பிரதமர் மோடி.. போர் விமானங்கள் தரை இறங்கி சாகசம்..

பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள 341 கிலோ மீட்டர் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்பணித்தார். இதன்மூலம் பயண தூரம் வெகுவாக குறையும்.

இந்த விரைவுச்சாலை பொது போக்குவரத்திற்காக மட்டும் அல்லாமல் இராணுவ பயன்பாட்டிற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் போர் விமானங்கள் தரை இறங்கும் வகையில் இந்த சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூர்வாஞ்சல் விரைவுசாலை 342 கிலோ மீட்டம் தூரம் உடையது. நிலத்துடன் சேர்த்து 22,500 கோடி மதிப்பில் இந்த சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்திய விமானப்படையின் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்ட பூர்வாஞ்சல் விரைவு சாலையில் வந்து இறங்கினார்.

பின்னர் பிரதமர் மோடி பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையை முறைப்படி திறந்து வைத்தார். பின்னர் இந்திய விமானப்படை சார்பில் டச் அண்ட் கோ என்ற சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் Su-30 MKI, ஜாகுவார், மிராஜ் 2000, ரபேல், AN 32E போன்ற விமானங்கள் தரை இறங்கியது.

பின்னர் 45 நிமிடங்கள் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி இந்திய விமானப்படை விமானங்கள் நடத்தின. இந்த விரைவுச்சாலை உத்திர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து மௌ வரை ஒன்பது மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

Also Read: இந்தியாவின் அதிநவீன ராணி கம்லாபதி இரயில் நிலையத்தை நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி..

இந்த விரைவுச்சாலையின் மூலம் லக்னோவில் இருந்து காஜிபூருக்கு 6 மணி நேர பயண தூரம் இனி 3.30 மணி நேரமாக குறையும். மேலும் இந்த ஆறுவழிச்சாலையை எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

Also Read: முன்னாள் பாகிஸ்தான் இராணுவ வீரருக்கு பத்மஸ்ரீ விருது.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.