வன்முறை தொடர்பாக மேற்குவங்க ஆளுநரிடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி..

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடித்த நிலையில் அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதுவரை 6 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி மேற்குவங்க ஆளுநரிடம் சட்ட ஒழுங்கு குறித்து கேட்டறிந்தார். பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் நடக்கும் வன்முறையால் மிகவும் வேதனை பட்டதாக ஆளுநர் தெரிவித்தார். இந்த வன்முறை தொடர்பாக பாஜக தேசிய தலைவர் நட்டா இரண்டு நாள் பயணமாக மேற்குவங்கம் சென்று பாதிக்கப்பட்ட தனது தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இதுவரை 6 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4000க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களின் வீடுகளில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வன்முறை தொடர்பாக பாஜக நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேற்கு வங்கத்தில் வன்முறை தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கௌரவ் பாட்டியா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திரிணாமுல் பாஜக இடையேயான மோதலில் 6 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மம்தா பானர்ஜி தனது தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். வன்முறைக்கு பாஜகவே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *