ஆபாச பதிவு.. நடிகர் சித்தார்த் மீது FIR பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் கடிதம்..

நடிகர் சித்தார்த் பாஜக மீது அவ்வபோது கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த, பத்மஸ்ரீ விருது மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மீது ஆபாசமான கருத்து தெரிவித்ததால் நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்ககோரி மகாராஷ்ட்ரா டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக விசாரித்து நடிகர் சித்தார்த் மீது FIR பதிவு செய்யும்படி ரேகா ஷர்மா கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட போது பிரதமரின் கான்வாயை போராட்டகாரர்கள் வழிமறித்ததால் பிரதமர் 20 நிமிடங்கள் காத்திருந்து நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு விமானநிலையத்திற்கு திரும்பினார்.

இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். அதில், நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என சாய்னா நேவால் ட்விட் செய்து இருந்தார். இதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த், உலகின் நுட்பமான சேவல் சாம்பியன், கடவுளுக்கு நன்றி எங்களிடம் இந்தியாவை பாதுகாப்பவர்கள் உள்ளனர். வெட்கப்படுகிறோம் #ரிஹானா என அநாகரீகமாக பதிவு செய்தார்.

இதற்கு பதிலளித்த சாய்னா, அவர் என்ன சொன்னார் என எனக்கு தெரியவில்லை. நான் அவரை ஒரு நடிகராக விரும்பினேன். ஆனால் இது நன்றாக இல்லை, அவர் சிறந்த வார்த்தைகளால் தன்னை வெளிபடுத்துவார். ஆனால், இது ட்விட்டர் என்று நான் நினைக்கிறேன். மேலும் இதுபோன்ற வார்த்தைகள் மற்றும் கருத்துக்களால் நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள். இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஒரு பிரச்சனை என்றால் நாட்டில் எது பாதுகாப்பானது என்று எனக்கு தெரியவில்லை என நேவால் கூறினார்.

இந்த நிலையில் இந்த பதிவை பார்த்த தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மா, இந்த கருத்து பெண் வெறுப்பு, அவமதிப்பு மற்றும் அவமரியாதை போன்றது. சமூக வலைதளங்களில் பெண்களின் கண்ணியம் காக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்குமாறு மகாராஷ்ட்ரா டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சட்ட விதிகளின் கீழ் நடிகர் சித்தார்த் மீது FIR பதிவு செய்யுங்கள் என கூறியுள்ளார். ரேகா ஷர்மா தனது அறிக்கையில், நடிகர் சித்தார்த்தின் இந்த மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை ஆணையம் கண்டிக்கிறது. இந்த விவகாரத்தை விசாரித்து, இந்திய தண்டனை சட்டம் 1860 மற்றும் தகவல் தொழிற்நுட்ப சட்டம் 2000 ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்ய வேண்டும்.

மேலும் நடிகர் சித்தார்த்தின் பதிவு, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354A பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை. இந்திய தொழிற்நுட்ப சட்டம் 2000, பிரிவு 67 மின்னனு வடிவத்தில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுவது அல்லது அனுப்புவது தொடர்பான தண்டனை என ஆணையம் தெரிவித்துள்ளது.

நடிகர் சித்தார்த்தின் கருத்துக்கு சின்மயி, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடுமையான எதிர்ப்பை சந்தித்ததால் நடிகர் சித்தார்த், தான் யாரையும் அவமதிக்கவில்லை, “COCK & BULL” அதுதான் குறிப்பு. மற்றப்படி அவமரியாதைக்குறிய எதுவும் சொல்லப்படவில்லை, வலியுறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.