ஜம்மு காஷ்மீரில் நாளை இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி..?
பிரதமர் மோடி இந்த முறை தீபாவளியை ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் பகுதியில் இராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். பிரதமரின் வருகைக்காக நவ்ஷேரா செக்டார் தயாராகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை இராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். இனிப்புகள் மற்றும் பரிசுகளை இராணுவ வீரர்களுக்கு வழங்கி வருகிறார்.
2020 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் லாங்கேவாலா பகுதிக்கு சென்று எல்லையில் உள்ள வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2019 ஆம் ஆண்டு ரஜோரியில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 2018 ஆம் ஆண்டு உத்ராகாண்ட் எல்லை பகுதியில் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
2017 ஆம் ஆண்டு வடக்கு காஷ்மீரின் குரேஸ் பகுதியில் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். 2016 ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தின் சீன எல்லையில் உள்ள இராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். 2015 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில எல்லையில் தீபாவளி கொண்டாடினார். 2014 ஆம் ஆண்டு முதல்முறையாக சியாச்சினில் தீபாவளி கொண்டாடினார்.
Also Read: மீண்டும் ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும்.. பாகிஸ்தானுக்கு அமித்ஷா எச்சரிக்கை..
தற்போது பிரதமர் நவ்ஷேரா செக்டரில் கொண்டாட உள்ளார். ரஜோரியில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் இராணுவம் அவர்களை வேட்டையாடி வருகிறது. சனிக்கிழமை அன்று ரஜோரியில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே கண்ணிவெடியால் இந்திய வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அங்கு பிரதமர் மோடி நாளை தீபாவளி கொண்டாட உள்ளார்.