பிரதமர் மோடியிடம் கொரோனா தடுப்பூசி கேட்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ..?

கனடாவிற்கு கோவிட் தடுப்பூசிகளை வழங்க இந்தியா தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் உறுதியளித்தார்.

பிரதமர் மோடியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, இந்தியாவிலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் தேவை என மோடியிடம் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தன்னுடைய ட்வீட் ஒன்றில், “என் நண்பர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது மகிழ்ச்சி. கனடாவால் கோரப்படும் கோவிட் தடுப்பூசிகளை வழங்க இந்தியா தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்யும் என அவருக்கு உறுதியளித்தேன்” என்று மோடி ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மீட்சி போன்ற மற்ற முக்கியமான பிரச்சினைகளில் தொடர்ந்து ஒத்துழைக்கவும் நாங்கள் ஒப்புக் கொண்டோம், என்று மோடி கூறினார்.


பல முக்கிய புவிசார் அரசியல் பிரச்சினைகளில் இந்தியாவும் கனடாவும் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளையும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர். பருவநிலை மாற்றம் மற்றும் தொற்று நோயின் பொருளாதார தாக்கங்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்ப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை தொடர அவர்கள் ஒப்புக் கொண்டனர் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச அளவில் தலைவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதை எதிர்நோக்கியுள்ளதாகவும், பரஸ்பர நலன்தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் தொடர்ந்து கலந்துரையாடுவார்கள் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த வாரம், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் பூரீவத்சவா கூறுகையில், இந்தியா 56 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை மானிய உதவியின் கீழும், 100 லட்சம் டோஸ்களையும் வர்த்தக ரீதியாக பல நாடுகளுக்கு அனுப்பியுள்ளது என்றார்.
இந்தியாவின் இரண்டு தடுப்பூசிகளான Covishield மற்றும் Covaxin ஆகியவை நாடு முழுவதும் உள்ள முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனேகா வின் கோவிஷீல்டு இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது மற்றும் கோவாக்சின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *