DRDO உருவாக்கிய ஆக்சிகேர் சிஸ்டத்தை 322 கோடி ரூபாய் செலவில் வாங்க PM CARES ஒப்புதல்..

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து வரும் நிலையில் மருத்துவமனைகளும் நிரம்பியுள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய ஒரு லட்சம் ஆக்சிகேர் அமைப்பை வாங்குவதற்கு பி.எம் கேர்ஸ் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஆக்சிகேர் என்பது ஆக்சிஜன் செறிவூட்டல் அமைப்பை அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன் வழங்கும் அமைப்பு ஆகும்.

இந்த ஆக்சிகேர் அமைப்பில் 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர், ஒரு ஈரபதமூட்டி, நாசி கன்னுலா, ஒரு பிரஷர் ரெகுலேட்டர், கன்ரோலர் ஆகியவை உள்ளன. இரண்டாவது கட்டமைப்பில் மின்னணு கட்டமைப்புகள் உள்ளன. இவை தானாகவே குறைந்த அழுத்த ஒழுங்குமுறை மற்றும் SpO2 ஆய்வு மூலம் ஆக்சிஜன் ஓட்டத்தை தானாகவே கட்டுப்படுத்துகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட இந்த ஒரு லட்சம் ஆக்சிகேர் அமைப்பை பி.எம் கேர்ஸ் 322 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆக்சிகேர் அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட பாதுகாப்பு உயிரி பொறியியல் மற்றும் எலக்ட்ரோ மெடிக்கல் ஆய்வகம் உருவாக்கியுள்ளது.

பிரதமர் மோடி தனது ட்விட்டில் கூறும் போது, இந்த ஆக்சிகேர் DRDOவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது மற்றும் வலுவானது. இவை பல நன்மைகளை கொண்டுள்ளன. DRDOவிடம் இருந்து 1.5 லட்சம் யூனிட் ஆக்சிகேர் சிஸ்டம்ஸ் வாங்கப்படும் என தெரிவித்தார்.

ஏற்கனவே DRDO கொரோனாவுக்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையிலான பவுடர் வடிவிலான மருந்து ஒன்றை கண்டுபிடித்தது. இந்த மருந்து நல்ல பலன் தருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *